இலங்கையில் உலக சாதனை படைத்த கிறிஸ்துமஸ் மரம்! சாத்தியமானது எப்படி?

Report Print Raju Raju in இலங்கை
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி இலங்கையின் தலைநகரான கொழும்புவில் செயற்கை கிறிஸ்துமஸ் மரம் 187 அடி உயரத்தில் வைக்கப்பட்டது.

உலக சாதனையாக கருதப்படும் இந்த விடயம் செயல்பட மூலகாரணமாக இருந்தவர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்கா

advertisement

இதுபற்றி இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் மங்கலா குணசேகரா கூறுகையில், கொழும்புவில் உள்ள தேவாலத்தின் பேராயர் Malcolm Ranjith முதலில் எதற்கு இப்படி வீண் செலவுகள் செய்து இதை செய்ய வேண்டும்.

இதற்கு செலவாகும் $200,000 அளவிலான பணத்தை நாட்டுக்கு நலன் தரக்கூடிய வேறு எதாவது விடயத்துக்கு செலவிடலாம் என கூறினார்.

பின்னர் இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவரிடம் பேசி இதற்கு சம்மதம் பெற்று தந்ததாகவும் அவரின் ஆசியுடன் தான் இதை செய்ததாகவும் குணசேகரா கூறியுள்ளார்.

மேலும், இந்த செயற்கை மரத்தை 328 அடி உயரத்துக்கு செய்யவே நாங்கள் முதலில் திட்டமிட்டோம். ஆனால் நேரமின்மை காரணமாக எங்களால் 187 அடி உயரத்துக்கே செய்ய முடிந்தது.

ஆனாலும் தெற்கு சீன மாகாணத்தில் போன வருடம் வைக்கப்பட்ட செயற்கை கிறிஸ்துமஸ் மரத்தை விட இது 2 அடி உயரம் என கூறியுள்ளார்.

இந்த கிறிஸ்துமஸ் மரத்தை அதிக உயரமான செயற்கை மரம் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக இந்த குழு தற்போது காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments