இலங்கையில் அமெரிக்காவின் தலையீடு! ராஜபக்ச சொல்வது என்ன?

Report Print Fathima Fathima in இலங்கை
0Shares
0Shares
Cineulagam.com

ட்ரம்ப்பின் தலைமையின் கீழ் அமெரிக்க - ரஷ்யா இடையே நல்லுறவு ஏற்பட்டால் உலக நாடுகளில் நிலவும் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்க்கப்படும் என ராஜபக்ச கூறியுள்ளார்.

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தனது 71-வது பிறந்தநாளை வெள்ளிக்கிழமை கொண்டாடினார்.

அதன்பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ராஜபக்சே, அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, "அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்பின் தலைமையின் கீழ் அமெரிக்கா, ரஷ்யா இடையே நல்லுறவு ஏற்பட்டால் உலக நாடுகளில் நிலவும் பெரும்பாலான பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

மேலும் ட்ரம்ப் அதிபர் பதவி ஏற்ற பிறகு இலங்கையில் அமெரிக்காவின் தலையீடு குறையும் என்று நம்புகிறேன்" என்றார்.

அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி வகித்த 10 ஆண்டுகளில் ஒபாமாவுடன் தொடர் நட்பில் ராஜபக்சே இருந்தார்.

முன்னதாக 2009 ஆம் ஆண்டு ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் என்று ஐநா வலியுறுத்தியது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

- Thehindu

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments