அமெரிக்காவின் புதிய ஜனாதிபதிக்கு இலங்கை பிரதமர் வாழ்த்து

Report Print Peterson Peterson in இலங்கை
46Shares
46Shares
lankasrimarket.com

அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பிற்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரஷ்யா, இந்தியா, இஸ்ரேல், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இலங்கை பிரதமரான ரணில் விக்ரமசிங்க தனது பேஸ்புக் பக்கத்தில் டொனால்ட் டிரம்பிற்கு வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார்.

அதில், ‘ஜனாதிபதி பதவியை அடைய நீங்கள் கடந்து வந்த பாதை முக்கியத்துவம் வாய்ந்தது. உங்களுடனும் உங்கள் அரசாங்கத்துடனும் இணைந்து பணியாற்ற இலங்கை அரசு விரும்புகிறது’ என பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்

அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக அரசியல் மற்றும் ராணுவ பின்புலம் இல்லாமல் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தெரிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments