இலங்கைக்கு ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற குழு விடுத்த எச்சரிக்கை

Report Print Fathima Fathima in இலங்கை
187Shares
187Shares
lankasrimarket.com

இலங்கையில் மனித உரிமையை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே சிறப்பு வர்த்தக சலுகைகளை ஐரோப்பிய யூனியனிடம் இருந்து மீண்டும் பெற முடியும் என ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற குழு தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வந்ததால் ஐரோப்பிய யூனியனின் சிறப்பு வர்த்தக உரிமைச் சலுகையை இலங்கையிடம் இருந்து ஐரோப்பிய யூனியன் பறித்துக் கொண்டது.

இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்த வேண்டும் என ஐரோப்பிய யூனியன் பாராளுமன்ற குழு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றத்தின் தலைவர் ஜான் லம்பெர்ட் கூறுகையில், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தால் மட்டும் தான் இலங்கை தனக்கு தேவையான சிறப்பு வர்த்தக சலுகைகளை மீண்டும் பெற முடியும்.

எனவே கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments