இறுதி சடங்கின்போது உயிரோடு வந்த இளைஞரால் பரபரப்பு

Report Print Vino in இலங்கை
0Shares
0Shares
lankasrimarket.com

இலங்கையின் காலி பிரதேசத்தில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட இளைஞனின் இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த இளைஞன் உயிருடன் வந்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

கடந்த 8 ஆம் திகதி காலி மீன்பிடி துறைமுகத்தில் கடலுக்கு சென்ற இரண்டு படகுகள் மோதியதில் 21 வயதான இஷான் மஞ்சுல என்ற நபர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் குறித்த இளைஞரின் உறவினர்களினால் அவரின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், நேற்று வெளியான அறிவித்தலின்படி குறித்த தகவல் தவறானது எனவும் உயிரிழந்துள்ளவர் வேறு ஒரு நபர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உயிரிழந்ததாக தவறாக கூறப்பட்ட இளைஞர் இன்று காலி துறைமுகத்திற்கு உயிரோடு வந்துள்ளார்.

இறுதிச் சடங்கின்போது உயிருடன் வந்த இளைஞரினால் குறித்த பிரதேசத்தில் சற்று பரபரப்பு காணப்பட்டதுடன் குடும்பத்தினர் மத்தியில் ஒரு சங்கடமான நிலை ஏற்பட்டதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.

மேலும், குறித்த விபத்தில் 22 வயதான காலி மஹமோதர சியம்பலா கஹாவத்தையை சேர்ந்த இளைஞரே உண்மையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments