கற்பூரம் ஏற்றப்படுவதன் நோக்கம் என்ன?

Report Print Kavitha in ஆன்மீகம்
163Shares
163Shares
lankasrimarket.com

நம் முன்னோர் சாஸ்த்திர சம்பிரதாயங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள்.

நமது இந்து மத சம்பிரதாயங்களில் கற்பூரத்திற்கு முக்கிய பங்கு உண்டு.

கற்பூரம் என்பது ஒரு விநோதமான ஹைட்ரோகார்பன் பொருள். இதை எரிக்கும்போது பதங்கமாதல் என்னும் முறையில் எரிகிறது.

கற்பூரம் ஏற்றப்படுவது எதற்காக?

கற்பூரமாவது எரிக்கப்படும் போது அது ஒளியாகி காற்றில் கரைந்துவிடுகிறது. அதன் மிச்சம் என்பதே இருக்காது. அது போல நாமும் நம்முடைய இப்பிறவியின் மிச்ச சொச்சம் இல்லாமல், இறைவனோடு இரண்டறக் கலக்கும் பக்குவநிலையை அடையலாம் என்பதற்காக கற்பூரம் ஏற்றப்படுகின்றது.

அதுமட்டுமின்றி கற்பூரம் போல வெள்ளை உள்ளம், தூய உள்ளம் உடையோர், இடைப்பட்ட நிலைகளைக் கடந்து நேராக இறைவனிடத்தில் ஐக்கியமாகலாம் என்பதையும் கற்பூர ஆரத்தி நினைவுபடுத்துகிறது.

கற்பூரம் வெண்மையானது. அது போல ஆன்மா சுத்த தத்துவ குணமுள்ளது. கற்பூரம் ஏற்றியவுடன் அது தீபம் போல எரிகிறது. அதே போல மலம் நீங்கப்பெற்ற ஆன்மாவானது ஞானாக்கினியால் சிவகரணம் பெற்று நிற்கிறது. கற்பூரம் இறுதியில் ஒன்றுமின்றி கரைந்து போகிறது. அதே போல ஆன்மாவானது சரீரத்தை விட்டு நீங்கி மறைந்து இறைவனோடு ஒன்றுபடுகிறது என்பது ஜதீகம்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்