உலகத்திற்கு வரவிருக்கும் சகலவிதமான கஷ்ட நஷ்டங்களை முன்கூட்டியே தெரியப்படுத்துவது காலதேவதையாக கருதப்படும் மகரசங்கராந்தி ஆகும்.
இந்த மகரசங்கராந்தி தேவதையானவள், பீடைகள் நம்மை அண்டாமல் இருக்கவும், தங்களின் சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் செயல்பாடுகளை திருத்திக் கொண்டு நன்மைகள் பெறுவதற்காகவும் உதவுகிறாள்.
2018-19-ம் ஆண்டில் என்ன நடக்கும்?
- மலர் உற்பத்தி வெகுவாக பாதிக்கும்.
- ஜீவராசிகளுக்கு ரோகமும், பீடையும் பிடிக்கும்.
- மூடுபனியும், கடும் குளிரும் தாங்க முடியாத அளவிற்கு வரக்கூடும்.
- கனத்த மழை, மின்னல் இடி, சூறாவளி புயல் ஆகிய இயற்கை சீற்றங்களினால் பாதிப்புகள் உண்டு.
- அத்தியாவசிய உணவுப் பண்டங்களின் விளைச்சல் பாதிக்கும்.
- கலைத்துறை மற்றும் கலைகள் இழந்து தள்ளாடும்.
- யுத்தம், கலகங்களால் உயிர் சேதமும், சேதாரமும் உண்டாகும்.
- முக்கிய பிரஜைகள், முக்கியமற்றவர்களாக ஆக்கப்படுவார்கள்.
- போருக்கு தயார் நிலையில் இருக்க வேண்டி வரும்.
- மலை பிரதேசங்களுக்கு மண் அரிப்பாலும், நிலச்சரிவாலும் பாதிப்புகள் ஏற்படும்.
- வெவ்வேறு இயற்கை சீற்றங்களினால் கடுமையான பாதிப்புகள் உண்டாகக் கூடும்.
- பொறுப்பில் உள்ளவர்கள், பொறுப்பற்ற முறையில் நடந்துக் கொள்வார்கள்.
- சிறந்த விளையாட்டு வீரர்களின் ஆட்டம் சிறப்பாக போகும்.
- அழிவிற்கான கண்டுபிடிப்புகள் அதிகரிக்கும்.
- மக்கள் தொகை கிடுகிடுவென பெருகும்.
- அதிகாரம் படைத்தவர்கள் மக்களை பிரித்து ஆள்வார்கள்.
- சிந்தனைக்கு எட்டாத கோளாறுகள் ஏற்பட்டு, பலவாறு விபத்துக்கள் நிகழும்.
- எதிர்பார்த்ததை விட அதிகளவில் வரிகள் வசூலிக்கப்படும்.
- தகுதி இல்லாதவர்களே உயர் பதவியில் அமர்வார்கள்.
பரிகாரம்
மேற்கூறப்பட்ட விடயங்களை அலட்சியப்படுத்தாமல், அந்தந்த பொறுப்புகளில் இருப்பவர்கள், கடமை தவறாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வழிவகுத்து ஒழுங்கான முறையில் செயல்களை துரிதமாக மேற்கொண்டால் கஷ்ட நஷ்டங்கள் நீங்கி அனைவருக்கும் நன்மைகள் உண்டாகும்.