நீங்கள் எத்தனை முகம் உள்ள தீபம் ஏற்றுவீர்கள்? பலன்கள் இதுதான்

Report Print Printha in ஆன்மீகம்
0Shares
0Shares
lankasri.com

அகல், திரி, எண்ணெய், சுடர் இந்த நான்கும் சேர்ந்தது விளக்கு. இந்த நான்கும், அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் இணைந்த வாழ்க்கை என்பதை குறிக்கிறது.

நமது உடல் மற்றும் ஆன்மா ஆகிய இரண்டும் நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று போன்ற பஞ்சபூத சக்தியால் ஆட்கொள்ளப்படுகிறது.

எனவே இந்த பஞ்சபூதங்களை சமநிலையில் வைத்திருந்தாலே, நம் வாழ்க்கையில் உள்ள தொல்லைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

அதனால் பஞ்சபூத சக்தியை சமநிலைப்படுத்த பஞ்சதீப எண்ணெயை பயன்படுத்த வேண்டும்.

பஞ்சதீப எண்ணெய் என்றால் என்ன?

வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசுநெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களும் கலந்தது பஞ்சதீப எண்ணெய் ஆகும்.

பஞ்சமி திதியன்று, பஞ்சதீப எண்ணெய் ஊற்றி, ஐந்து முக விளக்கேற்றி வழிபட்டால், இறையருள் பரிப்பூரணமாகக் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

தீபம் ஏற்றும் முகத்தின் பலன்கள்?
  • நான்கு முக தீபம் ஏற்றி வழிபட்டால், பசு பூமி போன்ற செல்வங்களைத் தரும்.
  • மூன்று முக தீபம் ஏற்றி வழிபட்டால், புத்திர சுகம் கிடைக்கும்.
  • இரண்டு முக தீபம் ஏற்றி வழிபட்டால், குடும்ப ஒற்றுமை பெருகும்.
  • ஒரு முக தீபம் ஏற்றி வழிபட்டால், மத்திமமான பலன்கள் கிடைக்கும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்