ஏழரைச்சனி குழந்தைகளை பாதிக்குமா?

Report Print Printha in ஆன்மீகம்
189Shares
189Shares
lankasrimarket.com

ஒருவரின் ராசிக்கு முன்னும், அதற்கு அடுத்த ராசியிலும் சனி சஞ்சரிக்கும் காலத்தையே ஏழரை சனி என்கிறோம்.

இந்த ஏழரை சனி பிறப்பு ஜாதகத்தில் சந்திரனை கடந்து செல்வார். அந்த நேரத்தில் ஏழரை சனியால் பெறும் அவமானங்கள், காயங்கள் என்று வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத கஷ்டங்களாக இருக்கும்.

அதுவும் குழந்தைகளுக்கு ஏழரை சனி என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம்.

ஏழரை சனி குழந்தைகளுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

  • ஏழரை சனி நடக்கும் போது குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிப்படையும். அதனால் அதிகப்படியான மருத்துவ செலவுகள் அதிகமாகும்.

  • ஏழரை சனி நடக்கும் போது குழந்தைகளை கண்டிக்க கூடாது. இல்லையெனில் மன உளைச்சலுக்கு ஆளாகுவார்கள்.

  • 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் எனில், அதிக பிடிவாத குணத்துடன், படிப்பில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருப்பார்கள்.

பரிகாரம்

ஏழரை சனியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சனிக்கிழமை அன்று சிவன் கோவிலுக்கு அழைத்து சென்று அங்குள்ள நவக்கிரகங்களில் சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நன்மை உண்டாகும்.

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபடுவது, காக்கைக்கு சாதம் வைப்பது போன்ற வழிபாடுகளை செய்தால் நல்ல பலனை பெறலாம்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்