நவ கிரகங்களில் ஒன்றான சனி பகவான் கழுகு, எருமை அல்லது காகத்தை தன்னுடைய வாகனமாக கொண்டு அமர்ந்திருப்பார்.
சூரிய பகவானுடைய மகனாக பிறந்த சனி பகவானுக்கு ஒவ்வொரு வாரமும் வரும் சனிக் கிழமையில் கடுகு எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்து வருவார்கள்.
சனி பகவானுக்கு கடுகு எண்ணெய் அபிஷேகம் ஏன்?
அனுமான் ஸ்ரீ ராமனை நோக்கி வழிபடும் போது, சனி பகவான் அவர் முன் தோன்றி நீ ரொம்ப பலசாலி, வீர அனுமான் என்று எல்லாரும் கூறுகின்றனர் அப்போ என்னுடன் சண்டைக்கு வா யார் பலசாலி என்று பார்த்து விடலாம் என்று சனி பகவான் அனுமனை சண்டைக்கு அழைத்தார்.
அதற்கு உடனே அனுமான் சனி பகவானிடன் பணிவாக நான் ஸ்ரீ ராமனை தரிசிப்பதில் ஆர்வமாக இருக்கிறேன் என் எண்ணத்தை சிதறடிக்காமல் நீங்கள் சென்றால் நல்லது என்று பதில் கூறினார்.
ஆனால் சனி பகவான் அவர் கூறியதை பொருட்படுத்தாமல் மறுபடியும் சண்டைக்கு அழைத்தார். அதனால் கோபமடைந்த அனுமான் தன்னுடைய வாலால் சனி பகவானை இறுக்கக் கட்டி சிறை வைத்து விட்டார்.
சனி பகவான் அனுமானின் வால் பிடியிலிருந்து வெளி வர முயன்றும் தோல்வியே கிடைத்தது. சனி பகவான் பலத்த காயமடைந்து ரத்தம் வழிந்தது.
அதன் பின் சனி பகவான் அனுமானின் கோபத்தை பார்த்து தன் தவறை நினைத்து அவரிடம் மன்னிப்பு கேட்டார்.
அனுமானும் அவரை மன்னித்து தன்னுடைய பிடியிலிருந்து விடுதலை செய்தார்.
இனிமே எக்காரணத்தை கொண்டும் ராமர் பக்தர்கள் மற்றும் அனுமான் பக்தர்களுக்கு எந்த வித இடையூறும் செய்யமாட்டேன் என்று சனி பகவான் உறுதியளித்தார்.
அதன் பின் சனி பகவான் அனுமானிடம் தன்னுடைய காயத்திற்கு மருந்து தரும் படி கேட்டார். அதற்கு அனுமன் கடுகு எண்ணெய் உன் வலிக்கு சிறந்த மருந்தாகும் என்று கடுகு எண்ணெய்யை கொடுத்தார்.
இதன் காரணமாக தான் சனி பகவானுக்கு கடுகு எண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது.
என்ன பலன்?
கடுகு எண்ணெய் கொண்டு சனி பகவானுக்கு அபிஷேகம் செய்தால் நம்முடைய பிரச்சனைகள், கஷ்டங்கள், வலிகள் அனைத்துமே காணாமல் போய்விடும்.
சனிக் கிழமைகளில் ஏழை எளிய மக்களுக்கு எண்ணெய் மற்றும் புதிய ஆடைகளை தானமாக கொடுத்தால், சனி பகவானின் அருள் கிடைக்கும்.