இந்த பொருட்களை பூஜை அறையில் வைத்து விடாதீர்கள்

Report Print Printha in ஆன்மீகம்
522Shares
522Shares
lankasrimarket.com

நம் வீட்டு பூஜை அறையில் எந்தெந்த பொருட்களை வைக்கக் கூடாது என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

பூஜை அறையில் எந்த பொருட்களை வைக்கக் கூடாது?
  • பூஜை அறையில் வைக்கப்படும் வெற்றிலையின் நுனியும், வாழைப்பழத்தின் காம்பும் அவசியமாக இருக்க வேண்டும். அதோடு வெற்றிலை பாக்கில் சுண்ணாம்பு வைக்க கூடாது.
  • பச்ச அரிசியில் சாதம் செய்து கடவுளுக்கு படைக்க வேண்டும். அதோடு அவல் பொறி, கடலை, கற்கண்டு ஆகிய பொருட்களையும் வைத்து படைக்கலாம்.
  • நாகப்பழம், புளியம்பழம், மாதுளை, கொய்யாப்பழம், வாழைப்பழம், நெல்லி, இளந்தை விளாம்பழம், ஆகியவை வைத்து பூஜை செய்யலாம்.
  • தேங்காய் உடைக்கும் போது அதை சமமாக உடைத்து குடுமியை தனியாக பிரித்து எடுத்து விட வேண்டும். ஆனால் அழுகிய தேங்காய், வழுக்கை மற்றும் கோணலான தேங்காயை உடைக்கக் கூடாது.
  • கடவுளை வழிபடுவதற்கு முன் சாம்பிராணி புகை போட வேண்டும், அதனால் வீட்டில் உள்ள கெட்ட சக்திகள் நீங்கும்.
  • முதலில் கோலமிட்டு விக்ரகங்களை சரியாக அமைத்து, விளக்கு மற்றும் ஊதுவர்த்தி ஏற்றி அர்ச்சனை செய்த பின் கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும்.
  • கடவுள் பூஜைக்கு அருகம்புல், மல்லி, சாமந்தி, நீலப்பூ, ரோஜா, பன்னீர், சங்குப் பூ, தாமரை, மரிக்கொழுந்து, சம்பங்கி, துளசி, விரிச்சிப்பூ, ஆகிய மலர்களை கொண்டு பூஜை செய்யலாம்.
  • பூவின் இதழ்கள், அழுகிய, வாடிய, பூச்சி கடித்த, காய்ந்து போன பூக்களை பூஜைக்கு பயன்படுத்தவே கூடாது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்