லிங்கம் இந்த வடிவத்தில் இருப்பதன் காரணம் தெரியுமா? வியக்க வைக்கும் ரகசியம்

Report Print Printha in ஆன்மீகம்
947Shares
947Shares
lankasrimarket.com

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியில் ஒவ்வொரு கடவுள் பிரபலமாக இருக்கும். ஆனால், இந்தியா முழுக்க பிரபலமாக இருப்பது சிவபெருமான்.

இந்த சிவபெருமானுக்கு மனித உருவம் இருந்தாலும், அவரை லிங்க வடிவில் தான் பெரும்பாலான கோவிலில் வணங்கி வருகின்றார்கள். அத்தகைய லிங்க வடிவத்தின் பின்னணியில் பல ரகசியங்கள் மறைந்துள்ளது.

லிங்க வடிவத்தின் பின்னணி ரகசியங்கள்?

பிரயபாஸ் (Prayapas) என்ற பெயரில் ரோமானியர்கள் சிவலிங்க வடிவதை வணங்கி வருவதாகவும், அவர்களுக்கு பின் சிவலிங்க வடிவத்தை பாபிலோனாவிலும், பண்டைய காலத்து நகரமான மெசபடோமியா (Mesopotamia), ஹரப்பா மற்றும் மொகஞ்சதாரோவில் வழிபாட்டு வந்ததாக கூறப்படுகிறது.

லிங்க வடிவானது ஆணுறுப்பை குறிப்பது என்ற கூற்றுகளும் இருக்கின்றது. உண்மையில் பழங்காலத்தில் ஆணின் நிர்வாண தோற்றத்தை லிங்க தோற்றம் என்றே கூறியுள்ளனர்.

சமஸ்கிருத மொழியில் லிங்கம் என்பது ஒரு செயலின் பண்புகள் என்று பொருள் உள்ளது. மேலும், சமஸ்கிருத மொழியில் யோனி என்பது கருவாய் மற்றும் ஒரு இடத்தின் துவக்கம் என்ற பொருளும் உள்ளது.

ஆனால் இதுவே, தமிழில் யோனி என்பது பெண் குறியை குறிப்பதாகும். டானிஷ் ஆராய்ச்சியாளர் லிங்க வடிவம் ப்ரோடன், நியூட்ரான், எலக்ட்ரான் ஆகியவை கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

பண்டையக் காலத்தில் ப்ரோடன், நியூட்ரான், எலக்ட்ரான், ஆகிய மூன்று மூலக்கூறுகளும் லிங்கம், விஷ்ணு, பிரம்மா போன்ற மூன்று கடவுளை குறிப்பதாக அறியப்படுகிறது.

லிங்கம் மற்றும் யோனியின் வடிவமானது பிரபஞ்சத்தின் உருவாக்கத்தை குறிக்கிறது என்றும் சிலர் கூறுகிறார்கள்.

லிங்கம் எனப்படும் சிவன் முடிவற்ற நெருப்பை குறிக்கிறது. யோனி எனப்படும் சக்தி ஒரு இடத்தின் துவக்கத்தை குறிக்கிறது.

இவை, முடிவற்ற நெருப்பு பிழம்பான பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்குகிறது என்ற கூற்று இந்த வடிவத்தின் அர்த்தமாக அறியப்படுகிறது.

லிங்கம் என்பது வானத்தையும், ஆவுடை என்பது பூமியை குறிக்கிறது. இதனால், இந்த இரண்டின் வடிவமான முழு லிங்க தோற்றம் விண்ணுக்கும், மண்ணுக்கும் சிவன் எழுந்தருளியதை குறிக்கிறது என்று ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள்.

லிங்கத்தின் வகைகள்

லிங்கத்தை சிவ சதாக்கியம், அமூர்த்தி சதாக்கியம், மூர்த்தி சதாக்கியம், கர்த்திரு சதாக்கியம், கன்ம சதாக்கியம் போன்றவை பஞ்ச லிங்கமாக அறியப்படுகின்றது.

இதில் கன்ம சதாக்கிய பீடமும், லிங்க வடிவமும் இணைந்த தோற்றத்தை பல பெயர்களில் அழைக்கின்றனர். அவைகள்,

  • சுயம்பு லிங்கம் - தானாக தோன்றியது.
  • தேவி லிங்கம் - தேவி சக்தியால் வழிபடக்கூடிய லிங்கம்.
  • காண லிங்கம் - சிவமைந்தர்களான விநாயகர் மற்றும் முருகன் வழிபடும் லிங்க வடிவம்.
  • தைவிக லிங்கம் - இந்திரன், பிரம்மா, திருமால் மற்றும் உருத்திரன் ஆகியோர் வழிபடும் லிங்கம்.
  • ஆரிட லிங்கம் - அகத்தியர் போன்ற முனிவர்களால் வழிபடப்பட்ட லிங்கம்.
  • ராட்சத லிங்கம் - இராட்சதர்களால் பூஜை செய்யப்பட்ட லிங்கம்.
  • அசுர லிங்கம் - அசுரர்களால் பூஜை செய்யப்பட்ட லிங்கம்.
  • மானுட லிங்கம் - மனிதர்களால் பூஜை செய்யப்பட்ட லிங்கம்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்