செவ்வாய் தோஷத்திற்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்

Report Print Kavitha in ஆன்மீகம்
170Shares
170Shares
lankasrimarket.com

ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம் என கருதப்படும்.

செவ்வாய் தோஷத்திற்கு விரைவில் பலன் தரக்கூடிய எளிய பரிகாரங்களும் வழிபாடுகளும் பல உள்ளன.

செவ்வாய் தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள் சஷ்டி நாள், கிருத்திகை நாள், செவ்வாய்கிழமை இந்நாட்களில் முருகன் ஆலயத்திற்குச் சென்று அர்ச்சனை செய்து வரவும்.

செவ்வாய்க்குரிய அதிதேவதையான முருகனை வழிபடுவது கோதுமை ரொட்டி, வெள்ளை எள் கலந்த இனிப்பு பலகாரங்கள், துவரை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் கொடுப்பது நல்லது.

செவ்வாய் தோஷம் கொண்ட இருவர் திருமணம் செய்து கொண்டால் இந்த கிரகத்தின் தாக்கங்கள் ஒன்றுமில்லாமல் போய் விடும்.

செவ்வாய்க்குரிய கல்லான பவளக்கல்லை மோதிரத்தில் பதித்து அணிவது சிவப்பு நிற ஆடையை அணிந்து கொள்வது, செப்புப் பாத்திரங்களை உபயோகிப்பது போன்றவற்றால் செவ்வாயால் உண்டாகக்கூடிய தோஷங்கள் குறையும்.

எதையும் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்கள் சஷ்டி நாள், கிருத்திகை நாள், செவ்வாய்கிழமை இந்நாட்களில் பக்கத்தில் உள்ள முருகன் ஆலயத்திற்குச் சென்று பெயருக்கு அர்ச்சனை செய்து வரவும்.

இதுவும் முடியவில்லை என்றால் செவ்வாய் காயத்ரி மந்திரத்தை நான்றாக படித்து மனதில் சொல்லிக் கொண்டு தியானத்தில் ஈடுபடவும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்