எந்த எண்ணெயில் விளக்கேற்றினால் அதிர்ஷ்டம்? இந்த 2 எண்ணெய்கள் மட்டும் வேண்டாம்

Report Print Printha in ஆன்மீகம்
1002Shares
1002Shares
lankasrimarket.com

நம் வீட்டில் கடவுளை வணங்கி விளக்கு ஏற்றுவதன் மூலம் அறியாமை இருள் விலகி, வீடு புனிதமடைந்து, வாழ்க்கையின் வளம், ஆரோக்கியம், செல்வம் ஆகிய அனைத்தும் அதிகரிக்கிறது.

அந்த விளக்கில் ஊற்றி ஏற்றப்படும் ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு.

விளக்கேற்ற பயன்படுத்தக் கூடாத எண்ணெய்கள்?

சூரியகாந்தி எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்யில் எப்போதுமே விளக்கேற்ற கூடாது. ஏனெனில் அதனால் கடன் தொல்லை அதிகரித்து நிதி நிலையில் பற்றாக்குறை ஆகிய பிரச்சனைகள் உண்டாகும்.

எந்த எண்ணெய்யில் விளக்கேற்றினால் என்ன பலன்?
  • பசுவின் நெய்யை ஊற்றி விளக்கேற்றினால், ஏழ்மை, தீயசக்திகள் நீங்கி, நேர்மறை அதிர்வுகள், ஆரோக்கியம், செல்வம், நல்ல அதிர்ஷ்டம் மற்றும் வளமான வாழக்கை உண்டாகும்.
  • எள்ளின் மூலம் தயாரித்த நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் சகல தோஷங்களும், தீய ஆவிகளும் நீக்கப்பட்டு, நாள்பட்ட பிரச்சனைகள் மற்றும் ஏழரை சனியின் பாதிப்புகள் ஆகியவை குறையும்.
  • வேப்ப எண்ணெயில் தீபம் ஏற்றினால் குல தெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைப்பதுடன், வீட்டில் செல்வ வளங்கள் அதிகரிக்கும்.
  • விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றினால் குடும்ப சந்தோஷம், வளர்ச்சி, ஆன்மீக முன்னேற்றம், உறவுகள், புகழ் மற்றும் செல்வ வளம் ஆகியவை பெறுகும்.
  • தேங்காய் எண்ணெயில் விளக்கேற்றுவதால் விநாயகரின் அருளை பெறலாம். குலதெய்வத்தின் அருள் பெற்று மகிழ்தச்சியாக இருக்கலாம்.
  • இலுப்பை எண்ணெயில் சிவ பெருமானின் அருளை பெறுவதற்காக தீபம் ஏற்றலாம். இதன் மூலம், கடன் தொல்லை, உடல் நலக்கோளாறு போன்றவை நீங்கும்.
பஞ்ச தீப எண்ணெய்

நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் மற்றும் பசுநெய் ஆகியவை கலந்து பஞ்ச தீப எண்ணெயாகும்.

இந்த பஞ்ச தீப எண்ணெய்யில் விளக்கு ஏற்றினால் நம் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள், தீவினைகள், கடன் தொல்லைகள், திருஷ்டி, எதிர்மறை எண்ணங்கள், நோய்கள், ஏழ்மை ஆகிய அனைத்தும் நீங்கி, செல்வ வளம், அதிர்ஷ்டம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, போன்றவை உண்டாகும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்