சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ள மரண ரகசியங்கள்

Report Print Kavitha in ஆன்மீகம்
329Shares
329Shares
lankasrimarket.com

பிறப்பு நிச்சயமானால் இறப்பு என்பது நிச்சயமற்றதே. மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இறப்பு நிச்சயம் தான்.

இவ்வுலகில் பாவ புண்ணியங்கள் அடிப்படையிலே இறப்பு என்பது கணிக்கப்படுகின்றது.

புண்ணியம் செய்தவர்கள் சொர்க்கத்திற்கும் பாவங்கள் சொய்தவர்கள் நரகத்திற்கும் கூட்டிச் செல்லப்படுகின்றார்கள்.

ஒருவர் இறக்கப்போகின்றார் என்றால் அவருக்கு 10 அறிகுறிகளை இறைவன் வெளிப்படுத்துவராம். இதனை அடிப்படையிலே நமது உயிரானது இவ்வுலகை விட்டுச் சென்றடையும்.

நாம் இறக்கபோகின்றோம் என்பதை அறிந்துக் கொள்வதற்கான 10 அறிகுறிகள்
  1. எப்போது ஒருவரது சருமத்தின் நிறமானது வெளிர் மஞ்சளாகவோ அல்லது வெள்ளையாகவோ அல்லது லேசான சிவப்பாக மாற ஆரம்பித்தால், அது அவர் இன்னும் 6 மாத காலத்தில் உயிரை விடப் போகிறார் என்று அர்த்தமாம்.
  2. எப்போது ஒருவனால் அவனது பிம்பத்தை எதிரொலியை தண்ணீரிலோ அல்லது கண்ணாடியிலோ தெளிவாக காண முடியவில்லையோ, அத்தகையவர்களும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்பதை வெளிப்படுத்துமாம்.
  3. எப்பொழுது ஒருவனுக்கு பார்க்கும் அனைத்தும் கருப்பாக தெரிய ஆரம்பிக்கிறதோ, அவர்களும் இறப்பை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.
  4. ஒருவரது இடது கை மட்டும் ஒரு வாரத்திற்கு மேல் துடிக்கவோ அல்லது நடுங்க ஆரம்பிக்கிறதோ, அவர்கள் ஒரு மாதத்திற்கு மேல் உயிருடன் இருக்கப் போவதில்லை என்று அர்த்தமாம்.
  5. ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள் இறுக்கமடைந்து கல் போன்று மாறுகிறதோ, அவர்களும் இன்னும் கொஞ்ச மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.
  6. நிலா, சூரியன் அல்லது நெருப்பின் ஒளியை சரியாக காணமுடியவில்லையோ, அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.
  7. எப்போது ஒருவரின் நாக்கு வீக்கமடைந்து, ஈறுகளில் சீழ் கட்ட ஆரம்பிக்கிறதோ, அவர்கள் இவ்வுலகில் நீண்ட நாட்கள் வாழப் போவதில்லை என்று அர்த்தம்.
  8. ஒருவரால் வானத்தில் உள்ள போல் நட்சத்திரங்களை காண முடியவில்லையோ, அவரும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தம்.
  9. சூரியன், நிலா மற்றும் வானத்தை பார்க்கும் போது, அவை சிவப்பாக தெரிய ஆரம்பித்தால், அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.
  10. ஒருவரின் கனவில் ஆந்தையோ, வெற்றிடமோ அல்லது கிராமம் அழிவது போன்றோ வந்தால், அவரும் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்