8 வருடங்களுக்கு முன் காணாமல் போன அம்மன் சிலை மீண்டும் கிடைத்த அதிசயம்

Report Print Reeron Reeron in ஆன்மீகம்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

அம்பாறை - நாவிதன்வெளி மாரியம்மன் கோவிலில் 08 வருடங்களுக்கு முன் காணாமல் போன அம்மன் சிலை மீண்டும் கிடைக்கப்பெற்றுள்ளது.

அந்த சிலையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, காணாமல் போயிருந்த அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டுள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.

advertisement

கடந்த 2009.11.12ஆம் திகதி நாவிதன்வெளி மாரியம்மன் கோவிலில் இருந்த மிகவும் பெறுமதியான சிலை ஒன்று காணாமல் போயிருந்தது.

இது குறித்து கோவில் நிர்வாகிகளால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இச்சிலை சில மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் மாரியம்மன் கோவில் முன் வாசலில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வேளையில் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இச்சிலை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றாஸாக்கினால் நேற்று நாவிதன்வெளி மாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பூசாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புதிதாக மாறும் நிர்வாகத்தினரிடம் மற்றும் பூசாரியிடம் இச்சிலை ஒப்படைக்க வேண்டும் எனவும், நீதிமன்றத்தால் கோரப்படும் பட்சத்தில் இதனை காண்பிக்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவுப் பிறப்பித்து சிலையை வழங்கியுள்ளார்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்