பெண்கள் இறுதிச்சடங்கில் ஈடுபடுவதில்லை ஏன்?

Report Print Printha in ஆன்மீகம்
238Shares
238Shares
lankasrimarket.com

இந்து மதத்தில் பல விதிமுறைகளும் ஒழுங்கு முறைகளும் உள்ளது. அதில் முக்கியமான சடங்குகளில் இருந்து பெண்களை ஒதுக்கப்படும் விதமாகவும் அமைகிறது. அப்படிப்பட்ட சடங்குளில் ஒன்று தான் பெற்றோருக்கு செய்ய வேண்டிய இறுதி காரியங்கள்.

பெற்றோர்களின் கடைசி காரியங்களை மகனே செய்ய வேண்டும் என்று இந்து மதத்தின் சமயத்திரு நூல்கள் கூறுகிறது. அதனால் கடைசி காரியங்களில் பெண்கள் ஈடுபடுவதில்லை.

பெண்கள் இறுதி சடங்கில் ஈடுபடுவதில்லை ஏன்?

பெண்கள் என்பவர்கள் இளகிய மனம் கொண்ட உணர்வுப் பூர்வமானவர்கள் என்று இந்து சமய நூல்கள் கூறுகிறது.

இறந்தவர்களின் மீது பெண்கள் அதிகளவில் அன்பு கொண்டிருப்பார்கள், அதனால் இறப்பை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்நிலையில் பெண்கள் கடைசி காரியங்களில் ஈடுபட்டால், மிகுந்த துயரத்திற்கு ஆளாவார்கள், இதனால் முழுமையாக செய்ய முடியாமல் போகலாம்.

மேலும் மாதவிடாய், கர்ப்பம் போன்றவையும் கடைசி காரியங்கள் செய்வதற்கு இடையூறாக இருக்கும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்