கோவிலுக்கு நகை அணிந்து செல்வது ஏன்? உண்மை இதுதான்

Report Print Printha in ஆன்மீகம்
235Shares
235Shares
lankasrimarket.com

பெண்கள் கோவிலுக்கு செல்லும் போது நகைகள் அணிந்து செல்லும் பழக்கம் உள்ளது. அது ஆடம்பரமாக இருந்தாலும் அதில் ஒரு அறிவியல் உண்மை மறைந்துள்ளது.

ஆம், கோவில்களுக்கு தங்க நகைகள் அணிந்து செல்வது அறிவியல், மருத்துவம், ஆன்மீகம் ஆகிய மூன்று வழிகளிலும் நன்மை கிடைக்குமாம்.

கோவிலுக்கு நகை அணிந்து செல்வது ஏன்?

கோவில்கள் அமைந்திருக்கும் இடம், அமைப்பு, உள் கட்டமைப்பு, கொடிமரம், மூலஸ்தானம், கோபுர கலசங்கள், உள்பிரகார பாதை என்று அனைத்தும் அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம் ஆகியவற்றோடு தொடர்பினை கொண்டுள்ளது.

கோவில்களில் காந்த அலைகள், நேர்மறையான அலைகள் அதிகமாக பரவி இருக்கும். காந்த அலைகள் பரவியிருக்கும் இடத்தில், செப்பு தகடுகளை பதித்து அதன் மீது சிலையை அமைத்து மூலஸ்தானம் உருவாகும்.

அந்த செப்பு தகடுகள் பல நல்ல அலைகளை கிரகித்து அதை பல மடங்காக அந்த சிலை மூலம் வெளிக்கொண்டு வரும்.

அதனால் கோவிலுக்கு நகைகள் அணிந்து செல்லும் போது, காந்த அலைகளை நகையில் உள்ள உலோகங்கள் பற்றி நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டாகும் என்று அறிவியல் கூறுகிறது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்