மர்மம் காக்கும் உலகின் முதல் சிவன் கோவில்: எங்கே உள்ளது தெரியுமா ?

Report Print Kavitha in ஆன்மீகம்
0Shares
0Shares
lankasri.com
advertisement

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் செல்லும் வழியில் சிவன் கோவில் அமைந்துள்ளது.

இக்கோயில் பாண்டிய நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற மிகவும் பழமையான திருக்கோயில் ஆகும். ஆனால் இது எப்போது கட்டப்பட்டது என்பது இது வரை மர்மமாகவே உள்ளது.

advertisement

இத்தலமே உலகில் முதல் முறையாக சிவனுக்கு கட்டப்பட்ட ஆலயமாகும்.

இத்திருத்தலத்தினை தட்சிண கயிலாயம், பத்ரிகாரண்யம் (இலந்தைவனம்) வியாக்ரபுரம், ஆதி சிதம்பரம், பிரமபுரம், சதுர்வேதபுரி, மங்களபுரி முதலியன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றது.

இத்தலத்தின் பழமையை உணர்த்துவதாக "மண் தோன்றிய போதே மங்கை தோன்றியது" என்னும் பழமொழி இப்பகுதியில் வழங்குகிறது.

மேலும், இத்தலத்தின் வரலாற்றுப் புராணத்தில் இராவணனின் மனைவி மண்டோதரியின் பெயர் குறிக்கப்படுவதாலும் சுவாமி மூலத்தான மதிலில் உள்ள கல்வெட்டுக்களில் மண்டோதரியின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதாலும், இக்கோயிலின் பழைமை வாய்ந்து என புலனாகிறது.

இத்துடன், சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் "இலவந்திகைப் பள்ளி" என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்பாரும் உளர். மேற்குறித்த கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.

பார்வதி தேவிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்தமையால் இத்தலம் உத்தரகோசமங்கை என்னும் பெயர் பெற்றது. மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.

advertisement

ராமாயணக் காலத்தில் இந்த கோயில் இருந்ததற்கான கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. ராவணனின் மனைவி மண்டோதரிக்கு காட்சி தருவதற்காக இங்கிருந்த சிவன் இலங்கைக்கு சென்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ராவணனுக்கும் மண்டோதரிக்கும் இங்கு தான் திருமணம் நடந்ததாகவும் கல்வெட்டுக்கள் உள்ளன.

இங்குள்ள நடராசருக்கு வருடத்தில் ஒரு முறை மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். அன்று மட்டும் அவரை கலைந்த திருக்கோலத்தில் தரிசிக்கலாம்.

advertisement

ராமாயணக் காலத்தில் இந்த கோயில் இருந்ததற்கான கல்வெட்டுக் குறிப்புகள் உள்ளன. ராவணனின் மனைவி மண்டோதரிக்கு காட்சி தருவதற்காக இங்கிருந்த சிவன் இலங்கைக்கு சென்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ராவணனுக்கும் மண்டோதரிக்கும் இங்கு தான் திருமணம் நடந்ததாகவும் கல்வெட்டுக்கள் உள்ளன.

இங்குள்ள நடராசருக்கு வருடத்தில் ஒரு முறை மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். அன்று மட்டும் அவரை கலைந்த திருக் கோலத்தில் தரிசிக்கலாம்.

இக்கோயிலில் அக்கினி தீர்த்தம் மற்றும் இது தவிர, கோயிலுக்கு வெளியில் பிரம்ம தீர்த்தமும் சற்றுத் தள்ளி 'மொய்யார்தடம் பொய்கை'த் தீர்த்தமும், வியாச தீர்த்தம், சீதள தீர்த்தம் முதலியனவும் உள்ளன. கோயிலுள்ளே மங்கள தீர்த்தமும் உள்ளது.

இக்கோயில் ராமர்காலத்தில் எழுந்த முதற் சிவன்கோயில் என்ற பெருமையும் உடையது. மற்றும் இவ்வாலயம் திருவாசகத்தில் 38 இடங்களில் இத்தலம் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது என்றும் மாணிக்கவாசகப் பெருமான், வேதவியாசர், காகபுஜண்டரிஷி, மிருகண்டு முனிவர், வாணாசுரன், மாயன் முதலியோர் வழிபட்டுப் பேறு பெற்றுள்ளனர் என்றும் அறியத்தக்கது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்