விநாயகர் சதுர்த்தி: நல்ல நேரம் எது? ராசிப்படி இந்த அபிஷேகம் செய்யுங்கள்

Report Print Printha in ஆன்மீகம்
1127Shares
1127Shares
lankasrimarket.com

ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடி வருகின்றோம்.

இந்நாளில் விநாயகரை முழு மனதோடு பூஜித்து விரதம் இருந்து வழிபட்டால் நமது கஷ்ட நஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.

விநாயகரை பூஜை செய்ய நல்ல நேரம்?

விநாய சதுர்த்தியில் காலை 4.30-7.30 மற்றும் 9.30-10.30 மணி வரை விநாயகருக்கு பூஜை செய்வது மிகவும் நல்ல நேரம் ஆகும்.

எந்த ராசிக்காரர்கள் என்ன அபிஷேகம் செய்யலாம்?
 • மேஷம் ராசிக்காரர்கள் மஞ்சள் பொடியில் விநாயகருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
 • ரிஷபம் ராசிக்காரர்கள் சானப் பொடியில் விநாயகருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
 • மிதுனம் ராசிக்காரர்கள் எலுமிச்சை சாற்றில் விநாயகருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
 • கடகம் ராசிக்காரர்கள் பச்சரிசி மாவில் விநாயகருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
 • சிம்மம் ராசிக்காரர்கள் பஞ்சாமிருதத்தில் விநாயகருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
 • கன்னி ராசிக்காரர்கள் நார்தம் பழம் மற்றும் சாத்துக்குடி பழத்தில் விநாயகருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
 • துலாம் ராசிக்காரர்கள் தேனில் விநாயகருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
 • விருச்சிகம் ராசிக்காரர்கள் இளநீரில் விநாயகருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
 • தனுசு ராசிக்காரர்கள் மஞ்சள் பொடி மற்றும் தேனில் விநாயகருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
 • மகரம் ராசிக்காரர்கள் சந்தனத்தில் விநாயகருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
 • கும்பம் ராசிக்காரர்கள் பஞ்சாமிருதத்தில் விநாயகருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
 • மீனம் ராசிக்காரர்கள் மஞ்சள் பொடி மற்றும் இளநீரில் விநாயகருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
விநாயகரின் அருளை பெற கூற வேண்டிய மந்திரங்கள்?

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

மூஷிக வாகன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித சூத்ர வாமன ரூப மஹேஸ்வர புத்ர விக்ன விநாயக பாத நமஸ்தே.

வக்ரதுண்டாய ஹீம் ஓம் நமோ ஹேரம்ப மதமோதித மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்.

இந்த ஸ்லோகங்களை விநாயகர் சதூர்த்தி அன்று மட்டும் இல்லாமல், தினமும் விநாயகருக்கு அருகம்புல் மாலையிட்டு வணங்கி, ஸ்லோகங்களை கூறினால் விநாயகரின் அருளை முழுமையாக பெறலாம்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்