தொலைந்ததை மீட்டுத் தரும் அம்மன்

Report Print Gokulan Gokulan in ஆன்மீகம்
127Shares
127Shares
lankasrimarket.com

தொலைந்ததை மீட்டுத் தரும் அருள்மிகு அரைக்காசு அம்மன் திருக்கோயில் தமிழ் நாட்டில் சென்னை மாவட்டத்தில் ரத்னமங்கலம் என்ற இடத்திலே உள்ளது.

இந்த ஆலயம் 500 ஆண்டுகள் பழமையானது.

இவ்வாலயத்தின் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்புரிகின்றார் . இவ்வாலயம் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டதாகவே கூறப்படுகின்றது.

இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் இல்லை. ஆனால் சூரிய சந்திரர் இருவர் மட்டும் உள்ளனர்.

இந்த ஆலயத்தின் ஆதி மூர்த்தி மகிழ்வன நாதர். இறைவியின் பிரகதாம்பாளை என்றும் மங்கள நாயகி என்றும் அழைக்கப்படுகின்றாள்.

ஆலயத்தின் தல விருட்சம் மகிழமரம். இவ்வாலயத்தின் தீர்த்தம் கங்கா தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.இந்த லிங்கத்தின் மீது பசுவின் காலடி சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறுகின்றனர்.

தல வரலாறு

ஆதிகாலத்தில் இத்தலம் மகிழமரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் மகிழவனம் என்று அழைக்கப்பட்டது.

இத்தலத்தில் கபில முனிவரும் மங்கள முனிவரும் ஆசிரமம் அமைத்து சிவபெருமானை வழிபட்டு வந்தனர்.

ஒரு நாள் தேவலோகத்தில் இந்திரசபை கூடியது. தேவர்களும் முனிவர்களும் சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். ஆனால் தேவ லோக பசுவான காமதேனு குறித்த நேரத்தில் வராமல் கால தாமதமாக வந்தது.

இதனால் கோபமடைந்த தேவேந்திரன் காமதேனுவை பூலோகத்தில் காட்டுப்பசுவாக ஆகும்படி சாபமிட்டான். இதனால் வேதனைப்பட்ட காமதேனு இந்திரன் மனைவியான இந்திராணியின் வழி காட்டுதலால் கபில வனத்தில் காட்டுப்பசுவாக வந்து சேர்ந்தது.

கபில வனத்தில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கத்தை தினமும் கங்கை நீரைக் கொண்டு வந்து பூஜித்தால் சாப விபோசனம் பெறலாம் என கபில முனிவரும் மங்கள முனிவரும் கூறினர்.

அதன்படி அப்பசு கங்கை நீரை தன் காதுகளில் நிரப்பி கொண்டுவந்து மகிழவனேசுவரருக்கு தினம் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது. அபிஷேகம் செய்த பின் எஞ்சிய நீரைத் தன் கொம்புகளால் பாறையைக் கீறி ஏற்படுத்திய பள்ளத்தில் விட்டு வந்தது.

அந்த பள்ளத்தில் நீர் நிறைந்திருக்கும் காட்சியை இப்போதும் காணலாம். நீர் நிறைந்த அந்த பள்ளம் கங்கா தீர்த்தம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

திருவிழாக்கள்

இவ்வாலயத்தில் தினசரி ஆறு கால பூஜை நடக்கும்

சித்திரையில் நடைபெறும் சித்திரை பெருந்திருவிழாவும், வைகாசியில் வரும் வசந்த விழாவும், ஆனியில் நடைபெறும் ஊஞ்சல் திருவிழாவும், ஆவணி மூல நாளில் சிறப்புற நடக்கும் காமதேனுவுக்கு மோட்சம் கொடுத்த திருவிழாவும் முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகும்.

திருமணம் நடந்தேற வேண்டியும், குழந்தை பேறு வேண்டியும் இந்த ஆலயத்திற்கு வருபவர்கள், கோவில் பள்ளியறையில் 48 நாட்கள் பால் வாங்கி வைத்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

நேர்த்திகடன்களும் பிராத்தனைகளும்

இவ்வாலயத்தில் குடி கொண்டிருக்கும் அம்மனை இழந்த பொருட்கள் கிடைக்க ஞாபக மறதி நீங்க இவளிடம் பக்தியுடன் வேண்டிக் கொள்ளுகின்றார்கள் மக்கள்.

வேண்டுதல் நிறைவேறியவர்கள் அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்து அம்பிகை அஷ்டோத்திரம் சொல்லி வழிபடுகின்றார்கள்.

அரைக்காசு அம்மனை வழிபட்டால் கடன் தொல்லை, வறுமை உள்ளிட்ட எந்தப் பிரச்சினைகள் இருந்தாலும் தீர்ந்துவிடும் என்று நம்பப்படுகிறது. மணப்பேறு, மகப்பேறு பாக்கியம் கிட்டும் என்றும்; ஏதாவது ஒரு பொருள் தொலைந்துவிட்டால் அரைக்காசு அம்மனை மனதில் எண்ணி வழிபட அந்தப் பொருள் ஒருசில மணி நேரத்திற்குள் அல்லது ஒருசில நாட்களுக்குள் கிடைத்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

அவ்வாறு தொலைந்து போய்விட்டதாகக் கருதப்பட்ட பொருள் கிட்டியவுடன் அரைக்காசு அம்மனை மனதில் நினைத்து பூஜையில் கொஞ்சம் வெல்லம் வைத்து நிவேதனம் செய்து அரைக்காசு அம்மன் வழிபட்டாலே இவள் பக்தர்களின் குறைகளை உடனடியாகத் தீர்த்து வைப்பாள் என்று கூறப்படுகின்றது.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்