ஸ்டீபன் ஹாக்கிங்கின் வெற்றி மொழிகள்

Report Print Kavitha in சிறப்பு
0Shares
0Shares
lankasri.com

1942ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங், கோட்பாட்டு இயற்பியலாளர், எழுத்தாளர் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர்.

இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும் அதீத ஈடுபாடு உடையவர். அண்டவியல் மற்றும் குவாண்டம் ஈர்ப்பு ஆகியன இவரது முக்கிய ஆய்வுத்துறைகள்.

தனது இளம்வயதிலேயே நரம்பியக்க நோயினால் பாதிக்கப்பட்டு, கை கால் இயக்கம் மற்றும் பேச்சு பாதிப்புகளுக்கு உள்ளானார்.

பல அறிவியல் குறிப்புகள் உட்பட உலகம் முழுவதும் விற்பனையில் சிறந்து விளங்கிய புத்தகங்களை எழுதியுள்ளார்.

அனைவரும் அறிவியலை அறிந்துகொள்ளும் விதத்தில் எளிய நடையில் அமைந்திருப்பது இவரது எழுத்துகளின் தனிச்சிறப்பு.

  • கீழ்நோக்கி உங்கள் பாதத்தைப் பார்க்காதீர்கள், மேல்நோக்கி நட்சத்திரங்களைப் பாருங்கள்.
  • எப்படியாயினும் கடினமான வாழ்க்கை உருவாகலாம், அங்கு எப்போதும் உங்களால் செயல்பட மற்றும் வெற்றிபெற முடிந்த ஏதாவது இருக்கும்.
  • நமது பேராசை மற்றும் மூடத்தனத்தின் மூலம் நாம் நம்மை அழித்துக்கொள்ளும் அபாயத்தில் இருக்கிறோம்.
  • நாம் அறிவியலைப் புரிந்துகொள்வதற்கு முன், இந்த பிரபஞ்சம் கடவுளால் படைக்கப்பட்டது என்று நம்புவது இயற்கையானதே.
  • இந்த பிரபஞ்சத்தை விட பெரியது அல்லது பழமையானது எதுவுமில்லை.
  • நமது நடவடிக்கையின் உயரிய மதிப்பினை நாம் தேடிப்பெற வேண்டும்.
  • அமைதியான மக்கள் சத்தமான மனதைக் கொண்டிருக்கிறார்கள்.
  • மனித முயற்சிக்கு எவ்வித எல்லைகளும் இருக்கக்கூடாது.
  • நீங்கள் எப்போதும் கோபமாகவோ அல்லது குறை கூறிக்கொண்டோ இருந்தால், உங்களுக்கான நேரம் மற்றவர்களிடம் இருக்காது.
  • உழைப்பு உங்களுக்கு அர்த்தத்தையும் நோக்கத்தையும் கொடுக்கின்றது.
  • உழைப்பு இல்லாத வாழ்க்கை வெறுமையானது.
  • வாழ்க்கை வேடிக்கையானதாக இல்லாமல் இருந்தால் துன்பம் நிறைந்ததாக இருக்கும்.
  • மிகவும் சராசரி நட்சத்திர குடும்பத்தில் ஒரு சிறிய கிரகத்தின் இருக்கும் மேம்பட்ட குரங்குகள் இனம் தான் மனிதர்கள் ஆனால் நாம் பிரபஞ்சத்தை நன்றாக புரிந்து வைத்துள்ளோம். அதுதான் நம் சிறப்பு.
  • மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனே புத்தி கூர்மை.
  • நீங்கள் எப்போதும் கோபமாக புகார் கூறிக் கொண்டிருந்தால் உங்களை மக்கள் புறக்கணிப்பார்.
  • அறியாமை அறிவாற்றிலின் மிகப்பெரிய எதிரியல்ல அது அறிவின் மாயையே ஆகும்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்