யானைகளில் புற்றுநோய் தொடர்பில் கிடைக்கப்பெற்ற ஆச்சரியமூட்டும் தகவல்

Report Print Givitharan Givitharan in சிறப்பு
0Shares
0Shares
lankasrimarket.com

அனைத்து வகையான பாலூட்டிகளிலும் புற்றுநோய் தாக்கும் அபாயம் காணப்படுகின்றது.

ஆனால் ஏனைய உயிரினங்களை விடவும் யானைகளில் புற்றுநோயை எதிர்க்கும் சக்தி இருக்கின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனிதர்களிலும் இவ்வாறான சக்தி காணப்படுகின்ற போதிலும் புற்றுநோயை முற்றிலுமாக எதிர்க்கும் சக்தி இல்லை.

யானைகளில் மனிதர்களில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை போன்று 100 மடங்கு சக்தி இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள Utah பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களே இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

புற்றுநோய் எதிர்ப்புக்கு p53 எனும் ஜீனே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபிரிக்க யானை ஒன்றில் 40 வரையான p53 நகல்கள் காணப்படுவதாகவும் மனிதர்களில் ஒன்று மாத்திரமே காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்