இங்கு சென்றால் உயிர் போகும்: இரத்த ஆறு பற்றி தெரியுமா?

Report Print Balamanuvelan in சிறப்பு
0Shares
0Shares
lankasri.com

டெல்லியின் ரோஹினி பகுதியில் அமைந்துள்ளது Khooni Nadi எனும் ஆறு.

இங்கு சென்றாலே நிச்சயம் உயிர் போகும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை, பலரும் தற்கொலை செய்து கொள்ளும் இடமாகவும் இது திகழ்கிறது.

பின்னணி கதை

கடந்த 1996ஆம் ஆண்டு கூலித்தொழிலாளி ஒருவரும், அவனது மனைவியும் ஆற்றின் மீது பாலம் ஒன்றைக் கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்.

திடீரெனக் கட்டுமானம் இடிந்து விழ இருவரும் ஆற்று நீரில் பரிதாபமாக இழுத்துச் செல்லப்பட்டார்கள்.

வாழாமலே வாழ்க்கை முடிய, கண் முன்னே துணையின் உயிர் பிரியும் கோரக்காட்சியைக் கண்டவாறே இருவரின் உயிரும் பிரிந்தது.

அன்று முதல் அந்த ஆறு பலரைக் காவு வாங்கத் தொடங்கியதாம், இரத்த ஆறு என்று பொருள்படும் Khooni Nadi என்று பெயரிடப்பட்டது.

திகிலூட்டும் சம்பவங்கள்

பல திகிலூட்டும் சம்பவங்கள் இந்த ஆற்றில் நடந்துள்ளதாக பொதுமக்கள் விவரிக்கின்றனர்.

படகில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென யமுனை நதியில் கட்டப்பட்டிருந்த அணையொன்று உடைய வெள்ளம் பெருக்கெடுத்தது, 30 முதல் 40 பேர் இறந்துபோனார்கள்.

ஆற்றோரம் நடந்து போன பலர் தற்கொலை செய்து கொண்டார்கள்.

ஆண்டுதோறும் Chath பூஜை நடக்கும் போதெல்லாம் விரதமிருக்கும் பல பெண்கள் ஆற்று நீரில் இழுத்துச்செல்லப்பட்டார்கள் என அடுக்கிக் கொண்டே செல்கின்றனர்.

வழிமறித்த ஆவி

2001ஆம் ஆண்டு, ரோந்து சென்றுகொண்டிருந்த இரண்டு பொலிஸ்காரர்களை ஒரு பெண் வழிமறித்தாள், அந்த பெண்ணை கவனித்து பார்த்த போது தான் அது பெண்ணல்ல என்பது தெரியவந்ததாம்.

பொலிஸ்காரர்கள் இருவரும் பயந்து அலற மற்ற பொலிஸ்காரர்கள் உதவிக்கு வந்தார்கள், அவர்கள் கண்முன்பே அந்த பெண் மங்கலாகி மறைந்துபோனாராம்.

இரவு நேரங்களில் யாராவது தப்பித்தவறி ஆற்றில் கால் வைத்துவிட்டால் அவ்வளவுதான், திரும்ப உயிரோடு வெளியே வரமுடியாது, ஆறு அவர்களை உயிரோடு உள்ளே இழுத்துக்கொள்ளுமாம்.

குழந்தைகளுக்கு ஏதும் ஆகாது

இன்னொரு பக்கம் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தங்கள் தாகத்தை இந்த ஆற்றில் தான் தணித்துக்கொள்கிறார்கள்.

ஒரு குழந்தைக்கும் ஒன்றும் ஆகவில்லை, ஒரு வேளை இறந்துபோன இருவருக்கும் குழந்தைகள் என்றால் ரொம்பப் பிடிக்குமோ என்னவோ, யார் கண்டது?

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்