முதலாம் உலகப்போர் நடைபெற்ற இடங்கள் 100 ஆண்டுகள் கழித்து இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா?

Report Print Kabilan in சிறப்பு
525Shares
525Shares
lankasrimarket.com

உலகின் முதல் உலகப்போரை, இன்று வரை நாம் நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு, ஒரு மிகப்பெரிய நிகழ்வாகும்.

முதலாம் உலகப்போர், கடந்த 2014ஆம் ஆண்டு தனது நூற்றாண்டை கடந்துள்ள நிலையில், அப்போது வீசப்பட்ட குண்டுகள், பயன்படுத்தப்பட்ட தளவாடங்கள், போர்க்களம் நிகழ்ந்த இடங்கள் ஆகியவை இப்போது எப்படி இருக்கிறது என்று இங்கு பார்ப்போம்.

கனடாவைச் சேர்ந்த படைவீரர்கள், கடந்த 1915ஆம் ஆண்டு நடந்த முதலாம் உலகப்போரில் விஷ வாயு செலுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். அவர்களின் நினைவாக பெல்ஜியத்தில் சிலை ஒன்று நிறுவப்பட்டது.

இந்த இடம், முதலாம் உலகப்போரின் போது ஆயுதக் கிடங்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இங்கு தற்போதும் வெடிகுண்டுகள் புதைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த இடத்தில் தான் உச்சகட்ட யுத்தம் நடந்துள்ளது. இன்று வரையிலும் இந்த இடத்தில், ஆங்காங்கே செல்களின் எச்சங்கள் கிடைத்துக் கொண்டிருக்கிறதாம்.

கடந்த 2014ஆம் ஆண்டில், சோமீ எனும் இடத்தில் மீட்புப் படையினரால் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இவை முதல் உலகப்போரில் வீசப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும், இங்கு விவசாயம் செய்யும் விவசாயிகள், ஒவ்வொரு ஆண்டும் டன் கணக்கில் உலோகத் துண்டுகள், கையெறி குண்டுகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம்.

ஜேர்மனியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர் கேதி கோல்விட்ஸ், போரில் இறந்தவர்களுக்கு தாய், தந்தையர் இரங்கல் தெரிவிக்கும் வகையில் சிலை ஒன்றை வடிவமைத்தார்.

அந்த இடத்தில்தான் போரில் கொல்லப்பட்ட கேதி மகன் பீட்டரின் உடலும், இன்னும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் உடல்களும் புதைக்கப்பட்டுள்ளது.

முதலாம் உலகப்போர் நடந்த களத்திற்கு அருகில் இருந்த கேப்பி எனும் ஆற்றுப்பகுதியில், புதைந்திருந்த குண்டினை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு, பிரான்சின் வடக்குப் பகுதியில் அமைந்திருக்கும் சான்கோர்ட் என்ற இடத்தில், கனடா நாட்டைச் சேர்ந்த படைவீரர்கள் தங்கள் சட்டையில் அணிந்திருந்த இலை போன்ற சின்னம் கண்டுபிடிக்கப்பட்டது.

பிரெஞ்ச் வீரர்கள் பயன்படுத்திய கடிகாரம், ஃப்ளூரி டிவண்ட் என்ற கிராமத்தில் 26 படை வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டபோது கண்டுபிடிக்கப்பட்டது.

பிரித்தானியாவின் மார்க்4 என்ற பீரங்கி, பிரான்ஸின் ஃபல்ஸ்க்யரிஸ் எனும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. பிரித்தானிய வீரர்கள் இதனைப் பயன்படுத்த முடியாது என்று கூறி விட்டுச் சென்றதாகவும், அதன் பிறகு வந்த ஜேர்மனிய வீரர்கள் இதனை நிலத்தில் புதைத்து, பதுங்கு குழிகளாகப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

பெல்ஜியம் நாட்டில் ப்யூட்டை எனும் இடத்தில் நடந்த போரால், மனிதர்கள் வசிக்க முடியாது என்றும், புல் கூட இந்த இடத்தில் முளைக்காது என்றும் கூறப்பட்டது. ஆனால், தற்போது முதன் முதலாக இங்கு சிகப்பு வண்ணப் பூக்கள் மலர்ந்துள்ளன.

பிரான்ஸின் அராஸ் எனும் இடத்தில், தொல்பொருள் ஆராய்ச்சியின் போது படைவீரர்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இவை கடந்த 1917ஆம் ஆண்டு நடந்த போரில் கொல்லப்பட்ட வீரர்கள் உடல்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதற்கு சாட்சியாக எலும்புக்கூடுகளின் கால்களில் காலணிகள் கிடைத்தன.

பெல்ஜியன் என்ற நகரின் அருகில் உள்ள யப்பர்ஸ் என்ற இடத்தில், முதல் உலகப்போரில் பங்குபெற்ற பிரித்தானிய வீரரின் 'Shoe' கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்