1000 அடி நீளமுள்ள மலைக்குகை : மார்பளவு நீரில் மூழ்கியிருக்கும் விசித்திர கோவில்

Report Print Kavitha in சிறப்பு
0Shares
0Shares
Cineulagam.com

காடுகளுக்குள்ளும் மலைகளின் மீதும் இருக்கும் பல கோயில்கள் குறித்து நாம் கேள்விபட்டிருப்போம்.

ஆனால் 1000 அடி நீளமுள்ள மலைக்குகையில் மார்பளவு நீரில் அமைந்திருக்கும் அதிசய நரசிம்மர் கோயில் குறித்து நாம் இதுவரை கேள்விபட்டிருக்க மாட்டோம்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மணிச்சூழ மலையில் உள்ளது தான் ஜர்னி நரசிம்மர் குகை கோவில்.

இந்த குகையின் முடிவில் ஒரு சிவலிங்கமும் நரசிம்மர் சிலையும் உள்ளது. இந்த நரசிம்மர் சுயம்புவாகத் தோன்றியது என்று கூறப்படுகிறது.

நரசிம்ம பெருமான் இரண்யகசிபுவை பிரகல்நாதனுக்காக வதம் செய்தபின்னர் ஜலாசுரன் என்ற அசுரனை இந்த குகையில் வதம் செய்ததாகவும் இறுதியில் அசுரன் நீராக மாறி நரசிம்மரின் பாதத்தில் சரணடைந்ததாகவும் தல புராணங்கள் கூறுகிறது.

பலநூறு ஆண்டுகளாக இந்த கோவிலில் குடிகொண்டிருக்கிற நரசிம்மரை பார்ப்பதென்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

300 அடி உயரத்தில் உள்ள ஒரு குகையில், மார்பளவு தண்ணீரை கடந்து போனால் தான் இங்குள்ள நரசிம்மரை நம்மால் தரிசிக்கவே முடியும்.

இந்த குகையில் தானாக ஊற்றெடுத்து தண்ணீர் வந்துகொண்டே இருக்கும். இந்த தண்ணீரில் பல மூலிகைகளின் சக்திகள் கலந்து இருப்பதால், இதில் நடந்து சென்றால் பல தீராத வியாதிகளும் தீரும்.இந்த குகையின் முடிவில் ஒரு சிவலிங்கமும் நரசிம்மர் சிலையும் உள்ளது.

நரசிம்மரை தரிசிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு, கடினமான பாதைகளைக் கடந்து செல்லும் பக்தர்களுக்கு மட்டுமே நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்