புலி மற்றும் சிங்கத்திற்கு இரையாவதிலிருந்து தப்பிப்பது எப்படி?

Report Print Givitharan Givitharan in சிறப்பு
101Shares
101Shares
lankasrimarket.com

காட்டில் வாழக்கூடிய மாமிச உண்ணிகளில் சிங்கம், புலி என்பன மிகச்சிறந்த வேட்டையாடும் விலங்குகளாக காணப்படுகின்றன.

இவற்றின் தாக்குதலில் இருந்து ஏனைய விலங்குகள் தப்பிப்பது மிகவும் கடினமாகும்.

எனினும் மற்றும் மற்றும் வரிக்குதிரைகள் போன்றன சில தருணங்களில் தப்பித்துவிடும்.

இவை எவ்வாறு தப்பிக்கின்றன என ஆராய்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவ் ஆராய்ச்சியினை லண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள ரோயல் கால்நடைக் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது மான்கள் மற்றும் வரிக்குதிரைகள் எவ்வாறு சிங்கம், புலியின் வேட்டையிலிருந்து தப்பிக்கின்றன என கண்டறிந்துள்ளனர்.

அதாவது சிங்கம் மற்றும் புலி என்பன குறைந்த நேரத்தில் தமது வேகத்தை அதிகரித்து தமது இரையைத் துரத்துகின்றன.

ஆனாலும் இரையை கைப்பற்றும் தருணத்தில் தமது வேகத்தினை சடுத்தியாக குறைக்கின்றன.

இந்த தருணத்தினைப் பயன்படுத்தி தமது திசையை மாற்றி வேகமாக ஓடும் இரைகள் தப்பித்துக்கொள்கின்றன என கண்டறிந்துள்ளனர்.

இதேவேளை வேகத்தினைக் குறைக்காமல் சிங்கம் மற்றும் புலியினால் இரையைக் கைப்பற்ற முடியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்