இலங்கைக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவரா? கட்டாயம் அறிந்து கொள்ளுங்கள்

Report Print Sujitha Sri in சிறப்பு
500Shares
500Shares
Seylon Bank Promotion

வெளிநாட்டவர்கள் (இலங்கை பிரஜைகள் அல்லாதோர்) இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கவும், அவர்கள் தங்கியிருக்கும் காலத்தினை வரையரை செய்யவும் மற்றும் நிபந்தனைகளை அறிவிக்கவும் பயன்படுத்தப்படும் ஆவணமே இலங்கை விசா அனுமதிப்பத்திரம் எனப்படுகிறது.

இலங்கை விசா அனுமதி பத்திரத்தில் பல வகைகள் உள்ளன. அந்த வகையில் சட்டரீதியாக இலங்கைக்குள் பிரவேசிக்கவும் மற்றும் தங்கி இருக்கவும் அனுமதி வழங்கும் நான்கு வகையான விசாக்கள் உள்ளன. இது தொடர்பிலான விபரங்கள்..

1. வருகைதரல் விசா

வருகைதரல் விசா என்பது வெளிநாட்டவர் ஒருவருக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க இலங்கை அரசாங்கத்தின் விருப்பத்தை தெரிவிக்கின்ற அனுமதிப் பத்திரம் ஆகும். இந்த விசா அனுமதிப் பத்திரத்தில் நாட்டுக்குள் தங்கியிருக்கக்கூடிய காலப் பகுதியும் நிபந்தனைகளும் அடங்கி இருக்கும்.

2. சுற்றுலா வருகைதரல் விசா அனுமதிப் பத்திரம்

குறுகிய காலப்பகுதிக்குள் இலங்கையில் தங்கியிருக்க கருதுகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா வருகைதரல் விசா அனுமதிப் பத்திரம் விநியோகிக்கப்படும்.

3. வதிவிட விசா அனுமதிப் பத்திரம்

வதிவிட விசா அனுமதிப் பத்திரம் என்பது விசேட கருமங்களுக்காக வதிவிட வசதிகளைப் பெற்றுக் கொள்ள விரும்புகின்ற இலங்கையர் அல்லாத ஆட்களுக்கு விநியோகிக்கப்படுகின்ற அனுமதிப்பத்திரமாகும். வதியும் விசா அனுமதிப் பத்திர வகையில் எட்டு உப வகைகள் உள்ளன.

 1. தொழில் வாய்ப்பு வகையினம்
 2. முதலீட்டு வகையினம்
 3. மாணவர் வகையினம்
 4. சமயம்சார் வகையினம்
 5. 1954 இந்திய - இலங்கை உடன்படிக்கையில் அடங்கும் பதிவு செய்த இந்தியர்கள்
 6. முன்னாள் இலங்கையர்களும் அவர்களில் தங்கிவாழ்வோரும்
 7. இலங்கையரொருவரின் குடும்ப அங்கத்தவர்கள் (வாழ்க்கைத்துணை, வெளிநாட்டு பிரசாவுரிமை கொண்ட சிறுவர்கள் விசா கட்டணம் பெற தகுதியற்றவர்களாக கருதப்படுகிறவர்கள்)
 8. ராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விசா அனுமதிப்பத்திரங்கள்

4. இடைத்தங்கல் விசா

இடைத்தங்கல் விசா என்பது வெளிநாட்டவரொருவர் பிறிதொரு பயண முடிவிடத்தை நோக்கிச் செல்கின்ற வேளையில் தற்காலிகமாக தங்கிச் செல்லும் பொருட்டு இலங்கையில் பிரவேசிக்க அவருக்கு வாய்ப்பு வழங்கும் அனுமதிப் பத்திரமாகும்.

5. கைமாறு கருதாத வீசா

ராஜதந்திர அல்லது உத்தியோகபூர்வ புறக்குறிப்பினைக் கொண்ட கடவுச்சீட்டினைக் கொண்டுள்ள ஒருவருக்கு வீசா அனுமதி பெற எவ்விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.

இலங்கை விசா அனுமதிப் பத்திரத்தினை பெறுவதற்கான பொதுவான தகமைகள்

 • நீங்கள் இலங்கைக்குள் பிரவேசிக்கப் பொருத்தமானவரென இலங்கை குடிவரவு - குடியகல்வு அதிகாரிகள் திருப்தியுறும் வேளையில்.
 • இலங்கைக்குள் பிரவேசிக்கும் நோக்கத்திற்கு இலங்கை குடிவரவு - குடியகல்வு அதிகாரிகள் அனுமதி வழங்கும் வேளையில்.
 • நீங்கள் இலங்கைக்கு வருகை தரும் தினத்தில் இருந்து குறைந்த பட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் கடவுச்சீட்டொன்றினை வைத்திருக்கும் வேளையில்.
 • இலங்கையில் நீங்கள் கழிக்கும் காலப் பகுதிக்குள் உங்களின் பராமரிப்புக்காகவும், உங்களின் வெளிநாட்டுக் கடவுச்சீட்டினை விநியோகித்த நாட்டுக்கு திரும்பிச் செல்லவும் போதுமானளவு நிதியம் உங்களிடம் இருப்பதாக குடிவரவு - குடியகல்வு அதிகாரிகள் திருப்தியடையும் வேளையில்.
 • நீங்கள் ஒரு நாட்டுக்கான வருகைதரல் விசா அனுமதிப் பத்திரம் உடையவரெனில் நீங்கள் வசிக்கும் நாட்டுக்கோ அல்லது நீங்கள் கருதியுள்ள அடுத்த பயண முடிவிட நாட்டுக்கான எழுத்திலான அனுமதி உங்களிடம் இருக்குமிடத்து.

விசாவினை பெற்றுக் கொள்ள செலுத்தப்பட வேண்டிய கட்டணங்கள் தொடர்பான விபரங்கள்..

விசா தொடர்பான மேலதிக தகவல்களுக்கு..

குடிவரவு குடியகல்வுத் திணைக்களம்,
"சுகுறுபாய",
சுபுத்திபுர வீதி,
பத்தரமுல்லை.

Web Site: www.immigration.gov.lk

அழைப்பு தொடர்பான தகவல்கள்..

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்