இப்படியும் நடக்கிறதா? உலகின் வியப்பூட்டும் உண்மைகள் இவை தான்

Report Print Raju Raju in சிறப்பு
0Shares
0Shares
lankasri.com
advertisement

உலகில் அனுதினமும் பல்வேறு வியப்பூட்டும் விடயங்கள் அரங்கேறி கொண்டு இருக்கின்றன, அப்படி பலருக்கும் தெரியாத வரலாற்று சிறப்புமிக்க முக்கிய விடயங்களை காண்போம்

கனடா

உலகின் பிற இடங்களுடன் ஒப்பிடுகையில், கனடாவில் இருக்கும் புவியீர்ப்பு சக்தி குறைவானதாக உள்ளது. இந்த நிகழ்வு கடந்த 1960-ல் கண்டுப்பிடிக்கப்பட்டது.

advertisement

எரிமலை வெடிப்பில் பலியான 1746 பேர்

1986-ல் கேமரூனில் நடந்த எரிமலை வெடிப்பின் போது, அதிலிருந்து வெளியான புகையால் ஓரிரு நிமிடத்தில் 1746 பேர் பலியாகினார்கள்.

25 லட்சம் உயிரினங்கள்

அடர்த்தியான அமேசான் மழைக்காடுகளில் 25 இலட்சத்திற்கும் மேலான பல வகை உயிரினங்கள், பூச்சிகள் இருக்கின்றன

நூறு கோடி டொலர்கள் வழங்கிய நார்வே

அமேசான் மழைக்காடுகளை காக்க நூறு கோடி அமெரிக்க டொலர்களை நார்வே நன்கொடையாக அளித்துள்ளது.

உலகின் குளிரான பகுதி

உலகில் மிகவும் குளிரான பகுதி அண்டார்டிகாவில் இருக்கும் ஹை ரிட்ஜ் என்னும் பகுதியாகும். இப்பகுதியின் வெட்பநிலை 133 டிகிரி ஃபாரன்ஹீட் ஆகும்!

சுனாமி வருவதை கணிக்கலாம்

கடற்கரையில் திடீரென நீர் சில மீட்டர்கள் உள்வாங்கினால் அங்கே சுனாமி வரப் போகிறது என அர்த்தமாகும்.

உலகின் பழமையான பொருள்

அவுஸ்திரேலியாவில் இருக்கும் ஆறாயிரம் டன் எடை கொண்ட புற்கள் தான் உலகின் பழமையான பொருளாகும். இது ஒரு லட்சம் ஆண்டுகள் பழமையானவை என அறியப்படுகிறது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்