இன்று உலக தற்கொலை தவிர்ப்பு தினமாகும்

Report Print Givitharan Givitharan in சிறப்பு
0Shares
0Shares
lankasri.com
advertisement

இன்றைய இயந்திர உலகில் தோல்விகள் மற்றும் மன அழுத்த அதிகரிப்பு காரணமாக தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன.

எனவே இது தொடர்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பொருட்டு செப்டெம்பர் 10 ஆம் திகதி உலக தற்கொலை தவிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்படடுள்ளது.

அதாவது தற்கொலைக்கு முயலும் நபர் சார்ந்து இருப்பவர்கள் அவரை காப்பாற்ற முடியும் என்பதை அடிப்படையாக வைத்தே இந்த தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

உறவினர்களோ, நண்பர்களோ அல்லது சேர்ந்து பணிபுரிபவர்களோ தற்கொலைக்கு முயலும் நபரின் மனநிலையை கண்டறிந்து ஆலோசனைகள் வழங்குவதன் ஊடாக குறித்த அபாயத்திலிருந்து அவரைக் காப்பாற்ற முடியும்.

இதேவேளை தனி நபர்களும் தமது நாளாந்த கடமைகளை தமக்கு பிடித்தவாறு மாற்றிக்கொண்டால் இப் பிரச்சினையிலிருந்து விடுபட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்