ஒரே மரத்தில் நாற்பது வகை பழங்கள்! அதிசயம் ஆனால் உண்மை

Report Print Kavitha in சிறப்பு
0Shares
0Shares
lankasrimarket.com

ஒரே மரத்தில் நாற்பது வகை பழங்களை உருவாக்கும் அதிசயமரத்தை பற்றி நீங்கள் அறிந்து இருக்கின்றீர்களா?

இவ்வகையான மரத்தை உருவாக்கி அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் சாதனைப் படைத்துள்ளார்.

அமெரிக்காவின் சைரகஸ் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பேராசியராக பணியாற்றும் சாம் வான் அகேன் என்பவரே குறித்த மரத்தை உருவாக்கியுள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டு நியூயோர்க் மாகாண விவசாய பரிசோதனை பண்ணையில் உருவாக்கிய இந்த மரங்கள் தற்போது பூவாகி, காயாகி பழங்களாக கண்ணைக் கவரும் வகையில் காட்சியளிக்கின்றது.

அவற்றில் குறிப்பிட்ட ஒரு மரத்தில் பல்வேறு விதமான பழங்களை காய்க்கச் செய்ய கடந்த 7 ஆண்டுகளாக தீவிர முயற்சி செய்தார்.

இதற்காக இவர் அந்த மரத்தில் வெவ்வேறு விதமான மரங்களின் தண்டுகளை இணைத்து வளர்த்து வந்தார். அந்த மரத்தில் தற்போது செரிஸ், பீச்சஸ், பிளம்ஸ், என 40 வகையான பழங்கள் காய்த்து தொங்குகின்றன.

இம்மரத்தை குளிர்காலத்தில் பார்ப்பவர்களுக்கு செம்பழுப்பு, ஊதா மற்றும் வெள்ளை என வானவில்லை போல் காட்சியளிக்கும் என்றும், கோடை காலத்தில் இம்மரம் பல்சுவை கொண்ட பழங்களை வழங்குவதாகவும், பேராசிரியர் சாம் வான் அகேன் கூறுகின்றார்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்