20 வகை அசைவ உணவுகளுடன்! அசத்தும் நம்ம வீட்டு சாப்பாடு

Report Print Raju Raju in சிறப்பு
0Shares
0Shares
lankasrimarket.com

உணவுகளை சமைப்பது மற்றும் பரிமாறுவதே மிகப்பெரிய கலை தான், அந்த கலையை திறம்பட தங்கள் வீட்டிலேயே நடத்தும் ஹொட்டல் மூலம் செய்து வருகிறார்கள் கருணைவேல்- சொர்ணலட்சுமி தம்பதியினர்.

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது ‘நம்ம வீட்டு சாப்பாடு’ எனும் ஹொட்டல்.

இங்கு மதிய நேர சாப்பாடு மட்டுமே கிடைக்கும், அன்லிமிடட் சாப்பாடு வகையில் 8 அடி கொண்ட பெரிய வாழை இலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4லிருந்து 5 பேர் ஒன்றாக சாப்பிடலாம்.

மட்டன் குழம்பு, இரத்த பொரியல், குடல் கறி, சிக்கன்,மீன் குழம்பு போன்ற 20க்கும் மேற்ப்பட்ட அசைவ வகைகள் இந்த சாப்பாட்டில் இடம்பெறுகின்றன.

இதன் விலை 500லிருந்து 700 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஹொட்டலில் மதிய நேரத்தில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

கணவன்- மனைவி என இருவரும் சேர்ந்தே வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுகிறார்கள்.

இது குறித்து கடையின் உரிமையாளர் கருணைவேல் கூறுகையில், வார இறுதி நாட்களிலும், விடுமுறை தினங்களிலும் 150க்கும் மேற்ப்பட்ட வாடிக்கையாளர்கள் இங்கு வருவார்கள்.

சாதாரண நாட்களில் சற்றும் கூட்டம் குறையும். மதியம் 12.30லிருந்து 3 மணி வரை மட்டுமே ஹொட்டல் செயல்ப்படும்.

உணவின் சுவை மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை பெறுவதே எங்களின் முக்கிய குறிக்கோள் என கூறுகிறார்.

கடந்த 1992-93 காலகட்டத்திக் கருணைவேல் குடும்பம் சிறிய உணவு கேண்டீன் ஆரம்பித்து தற்போது மிக பெரிய அளவில் வளர்ந்துள்ளார்கள்.

அசைவ உணவுகளை விதவிதமாக செய்து வாடிக்கையாளர்களை அசத்தும் கருணைவேல் - சொர்ணலட்சுமி தம்பதிகள் சுத்தமான சைவ பிரியர்கள் என்பது ஆச்சரியமான விடயமாகும்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments