இலங்கை குடிமக்களுக்கு ஓர் முக்கிய செய்தி

Report Print Peterson Peterson in சிறப்பு
0Shares
0Shares
lankasri.com

நாகரீகம் மற்றும் தொழில்நுட்பம் அதிவேகத்தில் வளரும் இந்த காலத்திலும் நமது அன்றாட வாழ்க்கையில் பல இன்னல்களையும் சந்தித்து வருகிறோம் என்றால் அது மிகையாகாது.

தமிழ் கலாசாரம் ஊறிய நமது சமுதாயத்தில் நமக்கு ஏற்படும் இன்னல்களை விட நமது பிள்ளைகளுக்கு ஏற்படும் இன்னல்கள் தான் நம்மை பெரிதும் பாதிப்பிற்குள்ளாக்கும்.

இவ்வாறு நமது பிள்ளைகளை அனைத்து விதத்திலும் பாதுகாக்கவும், அவர்களை சமுதாயத்தில் நல்ல முறையில் வளர்க்கவும் இலங்கை அரசு ஒரு விஷேசமான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NATIONAL CHILD PROTECTION AUTHORITY) என்ற சேவையை தொடங்கியுள்ளது என்பது நீங்கள் அறிந்ததே.

இந்த சேவை மூலம் பிள்ளைகள் சந்திக்கும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், அவர்களின் எதிர்காலம் தொடர்பாக எவ்வித ஆலோசனைகளையும் பெறவும் இந்த சேவையை இலங்கை குடிமக்கள் பயன்படுத்தலாம்.

இதற்கு முதலில் ’1929’ என்ற இலவச தொலைப்பேசி எண்ணை தொடர்புக்கொண்டு உங்களது பிள்ளைகள் தொடர்பான பிரச்சனைகளை சுறுக்கமாகவும், விரிவாகவும் பதிவு செய்துக்கொள்ளலாம்.

கடந்த 2010ம் ஆண்டு இலங்கையில் தொடங்கப்பட்ட இச்சேவை 24 மணி நேரமும், வாரம் மற்றும் மாதத்தின் அனைத்து நாட்களிலும் செயல்படும்.

இலங்கையில் எப்பகுதியில் இருந்தும் எந்நேரமும் நீங்கள் உடனடியாக 1929 என்ற எண்ணை தொடர்புக்கொள்ளலாம்.

தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் உங்களது பிள்ளைகள் தொடர்பான அனைத்து புகார்களை அளிக்கலாம்.

நீங்கள் பெற்றோராக இல்லை என்றாலும், பிற குழந்தைகளை பாதுகாக்கவும், அவர்களுடைய உரிமைகளை மீட்கவும் இந்த எண்ணை தொடர்புக்கொண்டு தீர்வு காணலாம்.

உங்கள் புகார்கள் உடனடியாக பதிவு செய்து குறிப்பிட்ட துறைகளுக்கு அனுப்பபட்டு அதற்கு தீர்வு காணப்படும்.

மேலும், ஒரு குழந்தை தொடர்பான புகார் பெறப்பட்டதும், அவற்றை ஆழமாக ஆராய்ந்து அந்த குழந்தையின் பிரச்சனை முழுமையாக தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆபத்தான தருணங்கள் மட்டுமின்றி உங்கள் குழந்தைகள் தன்நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும், மன உளைச்சலில் இருந்து விடுப்படவும் இலவச ஆலோசனைகளும் இந்த சேவை மூலம் வழங்கப்படுகின்றன.

இலங்கை அரசு தனது குடிமக்களுக்காக உருவாக்கி தந்துள்ள ‘1929’ என்ற எண்களை இப்போதே உங்களுடைய கைப்பேசியில் பதிவு செய்துக்கொள்ளுங்கள்.

இதன் மூலம் இலங்கையில் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக நிகழும் இன்னல்களுக்கு நீங்கள் உடனே தீர்வு காணலாம்.

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments