மக்கள் சேவையே மகேசன் சேவை என வாழ்ந்தார் ருக்மணி

Report Print Shalini in சிறப்பு
100Shares
100Shares
lankasrimarket.com

“மக்கள் சேவையே மகேசன் சேவை" என்பதை தனது வாழ்வின் பாடமாக கொண்டு மக்களுக்கு சேவை செய்வதில் தனது வாழ்க்கையின் ஒரு பாதியை அர்ப்பணித்தவரே திருமதி. நவரட்ணம் ருக்மணி அவர்கள்.

கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணம் ருக்மணி 1926ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் திகதி பிறந்தார்.

இவர் ஆஷ்ரமம் அமைத்தும், மற்றும் பல சமூகப்பணிகளை செய்தும் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் என்றால் அது மிகையாகாது.

அந்தவகையில் தனது சமூக சேவையின் ஒரு அங்கமாக “கோகுலம்” ஆஷ்ரமத்தை நிறுவ காணி வழங்கினார். இதன் மூலம் பலன் பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை ஏராளம்.

கோகுலம் ஆஷ்ரமம் வத்தளையில் அமைந்துள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையிலேயே இது அமைக்கப்பட்டது. இன்றுவரை குறித்த

ஆஷ்ரமத்தில் 120க்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறுகின்றனர்.

இவர் சமூக சேவையில் மட்டுமல்லாது கடவுள் பக்தியிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். “எம்மதமும் சம்மதம்” என்ற கோட்பாட்டை கொண்டவர்.

அன்பு, ஆதரவு, இரக்கம், ஈரம், அர்பணிப்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, அயராத உழைப்பு போன்றவற்றை அணிகலன்களாக அணிந்து மனிதகுலத்திற்கும் தமது

குடும்பத்தாருக்கும் பெறுமை தேடி கொடுத்தவர் ருக்மணி.

சைவ முன்னேற்ற சங்கம், கொம்பனித்தெரு அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலயம் போன்றவற்றுக்கும் இவர் தன்னால் முடியுமான உதவிகளை புரிந்துள்ளார்.

சைவ முன்னேற்ற சங்கத்திலுள்ளவர்கள் அவரை “தாயே” என அழைக்கும் அளவுக்கு இவர் அனைவரிடமும் அன்பாகவும் பணிவாகவும் இருந்துள்ளார்.

ருக்மணி, காலஞ்சென்ற அப்பாப்பிள்ளை நவரட்ணம் (ரியோ சினிமா, நவா சினிமா) அவர்களின் மனைவியாவார்.

ஒரு மனிதன் வாழும் காலத்தில் செய்யும் நன்மைகள், இறந்த பின்பும் அவனை வாழ வைக்கும் என்பார்கள். அந்த வகையில் ருக்மணி தாயார் இந்த மண்ணை விட்டு பிரிந்து சென்றாலும் அவரது சமூக சேவைகள் என்றென்னும் வாழும்.

1926ஆம் அண்டு ஜூலை மாதம் 14ஆம் திகதி பிறந்த ருக்மணி, 2017ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி இறைவனடி சேர்ந்தார்.

மேலதிக விபரங்கள் அறிய இங்கே அழுத்தவும்

மேலும் சிறப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்