செவ்வாய் கிரகத்தில் பயிர்ச்செய்கை மேற்கொள்வது எவ்வாறு?

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
150Shares
150Shares
lankasrimarket.com

இன்னும் ஒருசில தசாப்தங்களில் மனிதர்களை செவ்வாயில் தரையிறக்குவது தொடர்பான நடவடிக்கைகள் நடந்தவண்ணம் தான் உள்ளன.

இங்கு மனிதர்கள் நிரந்தரமாக தங்கவேண்டுமெனில் அவர்கள் எதை உண்ணப்போகின்றார்கள் என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.

அதற்கெனபுவியிலிருந்து வளங்களை வழங்குவதென்பது சாத்தியமற்றது.

தற்போது நீருள்ளது எனக் கண்டுபிடிக்கப்பட்டது அங்கு உயிரினங்கள் வாழக்கூடும் எனும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது. இது இவ் வளங்களை பயன்படுத்தி உணவை தயாரிக்கலாம் என்ற சாத்தியப்பாட்டையும் தருவதாக உள்ளது.

ஆனாலும் உணவென்னும் போது நீரே மிக முக்கியமான ஒன்று, முன்னைய ஆய்வுகள் நுண்ணங்கிகளை உணவாகப் பயன்படுத்தலாம் என்கிறது.

மேலும் கட்டுப்படுத்தப்பட்ட சூழல் நிலைமைகளில் பச்சை இல்லத்தில் நீர் ஊடகத்தில் தாவரங்களை வளர்ப்பது மற்றைய தெரிவாக உள்ளது.

இம் மாதம் Genes ஆய்வுப் பக்கத்தில் புதிய முறையொன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது நவீன செயற்கை உயிரியல் அடிப்படையில் தாவரங்களின் செயல் திறனை செவ்வாயில் அதிகரிப்பது அடிப்படையிலானது.

இது செவ்வாயில் தாவரங்களை வளர்ப்பதற்குத் தேவையான இயல்புகளை விருத்திசெய்ய உதவும் என்கிறது. இதில் தாவரங்கின் ஒளித்தொகுப்பை அதிகரிப்பது, சூரிய எரிவிலிருந்து தாவரங்களைப் பாதுகாப்பது, வறட்சி மற்றும் குளிர் நிலைமைகளுக்கு தாக்குப்பிடிக்கக் கூடிய தாவரங்களை உருவாக்குவது என்பன அடங்கும்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்