நாசாவின் கண்ணில் மண்ணைத் தூவி பூமியை நெருங்கிச் சென்ற இராட்சத விண்கல்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasri.com

அண்டவெளியில் பயணிக்கும் விண்கற்கள் தொடர்பில் விண்வெளி ஆய்வு நிலையங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்து வருகின்றன.

இக் கற்கள் பூமியைத் தாக்கலாம் என்பதனால் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஏற்கனவே நாசா நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்ததுடன் கற்களின் பயணம் பற்றிய தகவல்களை அடிக்கடி தெரிவித்து வந்தன.

ஆனால் தற்போது இராட்சத விண்கல் ஒன்று நாசாவின் கண்காணிப்பில் ஆரம்பத்தில் தென்படமால் பூமியைக் கடந்து சென்றுள்ளது.

இறுதித் தருணத்திலேயே நாசா நிறுவனம் இக் கல்லை கண்காணித்து எச்சரிக்கை செய்துள்ளது.

குறித்த கல்லானது ஒரு கால்பந்தாட்ட மைதானத்தின் அளவிற்கு விசாலமானது என நாசா தெரிவித்துள்ளது.

மணிக்கு 106,000 கிலோ மீற்றர்கள் எனும் வேகத்தில் பயணித்த குறித்த விண்கல் ஆனது பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரத்தின் அரைப் பங்கு தூரத்தில் பூமியைக் கடந்து சென்றுள்ளது.

இதனால் எவ்வித அனர்த்தங்களும் ஏற்பட்டிருக்கவில்லை என சுட்டிக்காட்டப்படடுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்