மின் சமிக்ஞையை வழங்குவதன் ஊடாக மூளையின் ஆற்றலை அதிகரிக்க முடியும்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

மூளைக்கு மின் சமிக்ஞையினை செயற்கையான முறையில் வழங்குவதன் ஊடாக நினைவாற்றலை அதிகரிக்க முடியும் என புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக அவர்கள் விசேட சாதனம் ஒன்றினை வடிவமைத்துள்ளனர்.

இச் சாதனத்தின் ஊடாக மூளையின் செயற்பாட்டினை கண்காணிக்க முடிவதுடன், மூளைக்கு மின் சமிக்ஞைகளை அனுப்பவும் முடியும்.

இவ்வாறு மின்சமிக்ஞைகளை அனுப்புவதன் ஊடாக மூளையின் செயற்பாட்டினை 15 சதவீதம் வரை அதிகரிக்க முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வாறு இடது மூளையின் செயற்பாட்டினை தூண்டுவதால் கல்வி கற்கும் திறன் மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்