சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நீரடி நகரம் கண்டுபிடிப்பு!

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

சுமார் 1,700 வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமியின் காரணமாக மூழ்கடிக்கப்பட்ட நகரம் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரோமனின் புராதன நகரமான நேபோலிஸ் தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த தொல்பொருள் ஆய்வாளர்களினாலேயே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் Tunisian National Heritage Institute மற்றும் இத்தாலியில் உள்ள Sassari பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்தவர்களாவர்.

இடிபாடுகளாக காணப்படும் இந்த நகரமானது சுமார் 20 ஹெக்டேயர்களிலும் அதிகமான பரப்பளவினைக் கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கி.பி 365 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 21 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி தாக்கத்தினாலேயே இந் நரகம் நீரில் மூழ்கியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்