புதுக்குடியிருப்பு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய தீமிதிப்பில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள்

Report Print Navoj in மதம்
226Shares
226Shares
lankasrimarket.com

வாழைச்சேனை - புதுக்குடியிருப்பு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் திருக்குளிர்த்தி மற்றும் தீ மிதிப்பு உற்சவம் இன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு கும்பம் வைத்தலுடன் ஆரம்பித்து தொடர்ந்து நான்கு நாட்கள் மதியப் பூசை, இரவுப் பூசை என்பன இடம்பெற்று இன்று திருக்குளிர்த்தி மற்றும் தீ மிதிப்பு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது வாழைச்சேனை, புதுக்குடியிருப்பு, பேத்தாழை, கல்மடு, கறுவாக்கேணி, சுங்காங்கேணி உட்பட பல கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றும் பொருட்டு தீ மிதிப்பில் கலந்து கொண்டனர்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்