சிறப்பாக இடம்பெற்ற பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செல்லும் நிகழ்வு

Report Print Nesan Nesan in மதம்
163Shares
163Shares
lankasrimarket.com

கல்முனை பாண்டிருப்பு திரௌபதையம்மன் ஆலயத்தின் திருச்சடங்கில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செல்லும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றள்ளது.

குறித்த நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றுள்ளது. மகாபாரதக்கதையின் வாழ்க்கை வரலாற்றினை சித்தரிக்கின்ற இந்த விழாவானது ஆண்டு தோறும் மிகவும் கோலாகலமாக இந்த ஆலயத்தில் நடத்தப்பட்டு வருகின்றது.

இதன்போது பக்த அடியார்களின் காவடி ஆட்டங்களும், கற்பூரச்சட்டி எடுத்து நேர்த்திக்கடனை செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

அத்துடன், பஞ்சபாண்டவர்கள் நோம்புச்சோறு உண்டு, தாங்கள் வனவாசத்தை முடித்து ஆலயத்தை சென்றடைந்து அம்பாளின் அருள் பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும், மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியில் மரபு ரீதியான முறையில் வீமன் வாள் மாற்றும் நிகழ்வும் இதன் சிறப்பம்சமாகும்.

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்