பெரியபோரதீவு ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி விழா

Report Print Kumar in மதம்
0Shares
0Shares
lankasri.com
advertisement

இலங்கையில் பழமைவாய்ந்த அம்மன் ஆலயங்களில் ஒன்றாக இருக்கும் மட்டக்களப்பு பெரியபோரதீவு ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி விழா ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நடைபெற்றது.

இந்த நிகழ்வு, இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், தீமிதிப்பு உற்சவத்துடன் நிறைவுற்றுள்ளது. சக்தி விழாவானது கடந்த 23ஆம் திகதி திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.

advertisement

கடந்த பத்து தினங்கள் நடைபெற்று வந்த ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கினை, விஸ்வப்பிரம்மஸ்ரீ வை.காந்தன்குருக்கள் சிறப்பான முறையில் நடத்தினார்.

இதில் அன்னையின் சக்தி மகா யாகம் நேற்று காலை சிறப்பான முறையில் நடைபெற்றதுடன், வாவியில் மஞ்சல்குளிக்கும் சடங்கும் நடைபெற்றது.

இன்று காலை மூல மூர்த்தியாகிய அன்னைக்கு விசேட பூஜைகள் நடைபெற்று, தீக்குளி காவல் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பக்தர்கள் புடைசூழ, பறைமேளம் முழங்கி அன்னை சக்தி ரூபமாக எழுந்தருளி தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

குறித்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அடியார்கள் பங்குகொண்டனர். தீமிதிப்பு உற்சகத்தினை தொடர்ந்து தெய்வாதிகள் வாக்குச்சொல்லும் நிகழ்வு நடைபெற்று, ஆயுதபூஜையுடன் சடங்கு நிறைவுபெற்றது.

திருச்சடங்கினையொட்டி களுவாஞ்சிகுடி பொலிஸார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டதுடன், விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டிருந்தன.

கி.மு.03ஆம் நூற்றாண்டு காலத்தில் உருவான ஆலயமாக கருதப்படும் பெரியபோரதீவு ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயம், இலங்கையில் உள்ள விஸ்வகர்ம மக்களின் வரலாற்று பொக்கிசமாக போற்றப்படுகின்றது.

அத்துடன் தென்னிந்தியாவில் உள்ள மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தினை ஒத்ததாக இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளமை, ஆலயத்தின் சிறப்பம்சமாகும்.

advertisement

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்