திருமணத்திற்கு முன் கர்ப்பம்: 38 வயது கர்ப்பிணி காதலிக்கு தாலி கட்டிய 23 வயது காதலன்

Report Print Deepthi Deepthi in உறவுமுறை
0Shares
0Shares

சீனாவில் 38 வயது பெண்ணும், 23 வயது இளைஞரும் காதலித்த திருமணம் செய்துகொண்டனர்.

15 வயது இளையவரைத் திருமணம் செய்துகொண்ட இந்தப் பெண்ணுக்கு, முதல் திருமணத்தின் மூலம் 14 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது.

ரியல் எஸ்டேட் தொழிலதிபராக இருக்கிறார் மணமகள். இவர் மீது காதல்வயப்பட்டு, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார் இளைஞர். வயது வித்தியாசத்தை நினைத்து முதலில் மறுத்தவர், ஒருகட்டத்தில் இளைஞரின் காதலை ஏற்றுக்கொண்டார்.

இவர்களது திருமணத்துக்கு இளைஞரின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதற்குள் மணமகள் கர்ப்பமாகிவிட்டார். அதனால் உடனடியாகத் திருமணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது.

உடனே 66 லட்சம் ரூபாய் ரொக்கமும் ஏராளமான நிலங்களும் ஃபெராரி ஸ்போர்ட்ஸ் காரும் வீடுகளும் வரதட்சணையாகக் கொடுப்பதாகச் சொன்னார் மணமகள். சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் கிடைத்தவுடன் மணமகனின் பெற்றோர் திருமணத்துக்கு சம்மதித்துவிட்டார்கள்.

அவர்களின் ஆசியுடன் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்