கர்ப்ப காலத்தில் சீரான தூக்கமின்மையா? அப்படியாயின் பாரிய விளைவு காத்திருக்கின்றது

Report Print Givitharan Givitharan in கர்ப்பம்
96Shares
96Shares
lankasrimarket.com

கர்ப்பம் தரித்த பெண்கள் தமது உடல் நிலையை சீராகப் பேண வேண்டும், அவ்வாறில்லாவிடில் குழந்தைப் பேற்றில் சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும்.

அதேபோன்றே கர்ப்ப காலத்தில் சீரான தூக்கமின்மையால் மற்றுமொரு பாரிய பிரச்சினையை எதிர்நோக்க நேரிடும் என புதிய ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதாவது தூக்க மூச்சுத்திணறல் மற்றும் தூக்கமின்மை என்பனவற்றினால் குழந்தைப் பேறு குறித்த தினங்களிற்கு முன்னர் நிகழ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

California San Francisco பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் குழு ஒன்றே இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது.

இந்த ஆய்விற்காக தூக்க பிரச்சினையை எதிர்நோக்கியிருந்த 2,265 கர்ப்பிணிப் பெண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களில் 14.6 சதவீதமானவர்கள் குறித்த தினங்களிற்கு முன்னதாகவே குழந்தைகளை பெற்றெடுத்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது 37 வாரங்களுக்கு முன்னரே குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனர்.

மேலும் கர்ப்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்