மண்ணெண்ணெய் இன்று நள்ளிரவு முதல் 70 ரூபாவாக விலை குறைப்பு!

Report Print Manju in அரசியல்
113Shares
113Shares
lankasrimarket.com

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 70 ரூபாவாக குறைக்கும் யோசனைக்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான யோசனை இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, அமைச்சரவை அனுமதிக்கு அமைய இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 70 ரூபாவாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவுக்கிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன்போது 70 ரூபாவாக குறைக்கும் யோசனைக்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 10 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

இதன்போது, 44 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 101 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அரசியல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்