பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம்! நாடாளுமன்றில் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

Report Print Kamel Kamel in பாராளுமன்றம்
829Shares
829Shares
lankasrimarket.com

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவியரிடம் பாலியல் லஞ்சம் கோரப்படுவதாக உயர் கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ நாடாளுமன்றில் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்றில் அவர் கருத்து வெளியிடுகையில்,

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிதியை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியமை குறித்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பேராசிரியர் ஒருவர், ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டமை அதிர்ச்சியளிக்கின்றது.

பல்கலைக்கழக நிதியில் வீடுகளை பராமரித்தல், மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இந்த பேராசிரியரின் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு குறித்து கோப் குழுவும் விசாரணை நடத்தி வருகின்றது.

அத்துடன், தென் கிழக்கு பல்கலைக்கழகத்தல் மாபியாவொன்று செயற்பட்டு வருகின்றது.

பரீட்சைகளில் சித்தியடையச் செய்வதற்காக சில பேராசிரியர்கள் பாலியல் லஞ்சம் பெற்றுக் கொள்கின்றனர்.

அண்மையல் தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்த போது இந்த விடயங்கள் தெரியவந்தது என அமைச்சர் விஜயதாச கூறியுள்ளார்.

மேலும் பாராளுமன்றம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்