eBay நிறுவனத்தில் பொருட்களை கொள்வனவு செய்ய இவ் வசதியினை பயன்படுத்தலாம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
55Shares
55Shares
lankasrimarket.com

ஆப்பிள், சாம்சுங் போன்ற நிறுவனங்கள் தமது உற்பத்திப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு இலகுவாக Apple Pay மற்றும் Samsung Pay போன்ற வசதிகளை அறிமுகம் செய்துள்ளன.

தற்போது இச் சேவைகளை குறித்த நிறுவனங்களில் உற்பத்திகளை மாத்திரமன்றி ஏனைய ஒன்லைன் வியாபாராங்களிலும் காலடி பதித்து வருகின்றன.

இந்நிலையில் eBay நிறுவனத்தில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக Apple Pay வசதியினை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே பேபால் மற்றும் கிரடிட் கார்ட் முறை மூலமான கொள்வனவுகளுக்கு பதிலாக Apple Pay வசதியினை பயன்படுத்திக்கொள்ளக் கூடியதாக இருத்தல் பயனர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாகும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்