பேஸ்புக்கில் இனி 18 வயதிற்குட்பட்டவர்கள் இதை பார்க்க முடியாது

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
214Shares
214Shares
lankasrimarket.com

பல்வேறு வகையான பிரச்சனைகள் எதிர்நோக்கப்படுவதனைக் கருத்தில் கொண்டு பேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகின்றது.

இவற்றின் தொடர்ச்சியாக மற்றுமொரு கட்டுப்பாட்டினைக் கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளது.

இதன்படி ஆயுத தளபாடங்கள் தொடர்பான விளம்பரங்களை 18 வயதிற்கு கீழானவர்கள் பார்க்க முடியாதவாறு மாற்றத்தினை மேற்கொள்ளவுள்ளது.

இது தொடர்பாக நேற்றைய தினம் பேஸ்புக் உத்தியோகபூர்வ அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இக் கட்டுப்பாட்டினை இம்மாதம் 21ம் திகதி முதல் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பார்க்லாண்ட், புளோரிடா, சன்டா பே மற்றும் டெக்ஸாஸிலுள்ள பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களையும் கருத்தில்கொண்டே இந்த எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்