எந்தவொரு இராட்சத விமானமாக இருந்தாலும் சிறிய பறவைகளுடன் மோதும்போது விமானங்களுக்கே பாரிய சேதம் ஏற்படுகின்றது.
இச் சந்தர்ப்பத்தில் விமானங்கள் விபத்துக்குள்ளாவதற்கான வாய்ப்புக்களும் அதிகம்.
எனவே விமானங்கள் பறவைகளுடன் மோதுவதை இயன்றளவில் குறைப்பதற்கான முயற்சிகளில் Smithsonian Feather Identification Lab ஈடுபட்டு வருகின்றது.
இந்த நிறுவனம் ஏற்கனவே ஆகாயத்தில் இடம்பெற்ற விமானம் மற்றும் பறவை மோதல்கள் தொடர்பாக சேமிக்கப்பட்டுள்ள விடயங்களை ஆய்வு செய்து வருகின்றது.
அதேபோன்று கடந்த 5 வருடங்களுள் விமானங்களுடன் மோதி இறந்த 250 பறவைகள் சேகரிக்கப்பட்டுள்ளதுடன் அவையும் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றது.
அமெரிக்காவில் மாத்திரம் இவ்வாறு விமானங்கள் பறவைகளுடன் மோதுவதனால் ஆண்டு தோறும் 1 பில்லியன் டொலர்கள் அளவிற்கு சேதம் ஏற்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.