உலகளவில் புதிய மைல்கல்லை எட்டியது WeChat செயலி

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

வாட்ஸ் ஆப் போன்று குறுஞ்செய்திகள் மற்றும் அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வசதியை தரும் மற்றுமொரு செயலியாக WeChat விளங்குகின்றது.

இது சீனாவை தளமாகக் கொண்டு செயற்பட்டு வரும் சமூகவலைத்தள செயலியாகும்.

இச் செயலியானது தற்போது உலகளவில் சுமார் ஒரு பில்லியன் பயனர்களை எட்டியுள்ளது.

இந்த தகவலை பினான்ஸியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும் இச் செயலியில் கணக்கினை உருவாக்கும் பயனர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் 15.8 சதவீதத்தினால் உயர்வடைவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தவிர தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் அசுர வளர்ச்சியினைக் கண்டுவருகின்றது.

நாள்தோறும் 902 மில்லியன் பயனர்கள் செயற்படு நிலையில் இருப்பதுடன் 38 பில்லியன் குறுஞ்செய்திகளும் பரிமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்