உயர் இரத்த அழுத்தம் தொடர்பில் எச்சரிக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasrimarket.com

Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமே எதிர்கால உலகை ஆளப்போகின்றது.

இதற்கான ஆரம்ப கட்ட கண்டுபிடிப்புகள் பல இதுவரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி ஒருவரின் உயர் இரத்த அழுத்தம் மற்றும் தூக்கத்தின்போதான மூச்சு திணறல் என்பன தொடர்பில் எச்சரிக்கும் அப்பிளிக்கேஷன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

GPS, இரத்த அழுத்த சென்சார், செலூலர் இணைப்பு மற்றும் கணினி உடனான தொடர்பு என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு செயற்படக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

American Heart Association மேற்கொண்ட ஆய்வின் பின்னரே இவ் அப்பிளிக்கேஷன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அப்பிளிக்கேஷனானது ஆப்பிளின் ஸ்மார்ட் கடிகாரத்தில் நிறுவியே பயன்படுத்த வேண்டும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்